செய்திகள் :

Green Rose : கோடையை வரவேற்க ஊட்டியில் பச்சை ரோஜா பூத்தாச்சு! - எங்கே போகணும் தெரியுமா?

post image

இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளில் கோடை வாசஸ்தலங்ளை நிறுவுவதில் தீவிரம் காட்டினர். வாட்டும் தென்னிந்திய வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களை நிர்மாணித்தனர்.

ஆடம்பரமான வாழிடச் சூழலை உருவாக்கியதுடன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளித்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தாவர இனங்களை கப்பல்கள் மூலம் தருவித்து இங்கு அறிமுகம் செய்தனர். 200 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த கோடை வாசஸ்தலங்கள் இன்றளவும் சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்குரிய தேர்வாக இருக்கின்றன.

green rose

ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்டு தற்போது தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு பூங்காக்களைத் தொடர்ந்து பொலிவுப்படுத்தி வருகின்றனர்.

கோடை சீசனை நெருங்கி வரும் நிலையில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மேலை நாட்டு கவிஞர்கள் கொண்டாடும் டஃபோடில்ஸ் முதல் தனித்துவமான பச்சை நிற ரோஜாக்கள் வரை மலர் மாடங்களில் அலங்காரிக்கச் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அரிய பச்சை நிற ரோஜாக்கள் நீலகிரியில் உள்ள அரசு பூங்காக்களில் பூத்திருக்கும் நிலையில், தவறாமல் இவற்றை கண்டு ரசிக்க பூங்கா அதிகாரிகள் சுற்றுலா பயணிகளை வரவேற்று வருகின்றனர்.

பச்சை ரோஜா

பச்சை ரோஜா குறித்து நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், " rosa chinensis viridi flora என அழைக்கப்படும் பச்சை நிற ரோஜாவை சீன ரோஜா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்கா மற்றும் குன்னூரில் இருக்கும் அரசு பூங்காவான சிம்ஸ் பூங்காவிலும் பராமரித்து வரப்படுகிறது. இந்த இரண்டு பூங்காக்களிலும் தற்போது இந்த பச்சை ரோஜாக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

green rose

பூங்காக்களில் ஆயிரக்கணக்கான ரோஜா ரகங்கள் இருந்தாலும் இதுபோன்ற தனித்துவமான ரோஜாவை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த இரண்டு பூங்காக்களிலும் பச்சை ரோஜாவை கண்டு ரசிக்கலாம். பச்சை ரோஜாக்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன் அவர்களின் வீடுகளில் வளர்க்கும் வகையிலும் பச்சை ரோஜா நாற்று உற்பத்தியை அதிகரித்து விற்பனை செய்யும் முயற்சியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

கோவை: நான்கு வழிச்சாலைக்காக வெட்டப்படப்போகும் 1000 மரங்கள் | Photo Album

சாலை ஓரங்களில் இருக்கும் 1000க்கு மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. இடம்: அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே உள்ள தேரம்பாளையம்.அன்னூர், மேட்டுப்பாளையம் இடையே தேரம்பாளையத்தில் உள்ள மரங்கள் வெட்டி... மேலும் பார்க்க

Water Bottle: குடுவை, பிளாஸ்டிக் பாட்டிலான கதை! - சுவாரஸ்யமான பின்னணி | Explainer

``தாயையும் தண்ணியையும் பழிக்கக் கூடாது..." என ஒரு பழமொழி உண்டு. தாயும், தண்ணீரும் உயிரை உருவாக்கி, வளர்த்து, காக்கும் ஆற்றல் பெற்றவர்கள். நீரின்றி அமையாது உலகு என்றான் வள்ளுவன். 'கத்திரி வெயில்' தொடங்... மேலும் பார்க்க

கரூர்: காய்கறித் தோட்டம்.. மீன்குட்டை.. மரங்களுக்குப் பெயர்ப் பலகை.. அரசுப் பள்ளியின் புதிய முயற்சி

தமிழக அளவில் செயல்பட்டு வரும் பசுமைப் பள்ளிகளில் மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படும் பள்ளியைத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்குச் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலி... மேலும் பார்க்க

Bear Tales: இரண்டு கரடிகளின் உண்மைக்கதை... ஒன்றின் பெயர் ஸ்டீபன்; இன்னொன்றின் பெயர்? | True Story

இது இரண்டு கரடிகளின் உண்மைக்கதை. ஒரு கரடியின் பெயர் ஸ்டீபன். இன்னொரு கரடியின் பெயர் பெயரை கலிபோர்னியா பத்திரிகைகள் 'கொடூரமான கருப்பு நிற கரடி' என குறிப்பிடுகின்றன. முதல் கரடிக்கு ஸ்டீபன் என பெயர் சூட்... மேலும் பார்க்க

'காற்று மாசு' - உலகின் டாப் 20 நகரங்களில் 13 இந்திய நகரங்கள்; எந்தெந்த மாநிலங்கள் மாசடைந்துள்ளன?

உலகின் அதிகம் மாசடைந்த 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக மார்ச் 11ம் தேதி வெளியான அறிக்கை கூறுகிறது. அந்த அறிக்கையின்படி, அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பைர்னிஹாட் நகரம் தான் இந்தியாவிலேயே அதி... மேலும் பார்க்க

Tiger death: கூடலூரில் மேலும் ஒரு புலியின் சடலம் கண்டெடுப்பு; தீவிர விசாரணையில் வனத்துறை

உலக அளவில் வங்கப் புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டிருக்கும் வனப்பகுதியாக நீலகிரி பல்லுயிர் வள மண்டலம் விளங்கி வருகிறது. புலிகள் காப்பகம் மட்டுமின்றி அதனை ஒட்டியுள்ள தனியார் தேயிலை, காப்பி தோட்டங்களிலு... மேலும் பார்க்க