செய்திகள் :

'திருநள்ளாற்றில் மார்ச் 29 சனிப்பெயர்ச்சி இல்லை' என்பது ஏன்? பக்தர்கள் கேள்வியும் ஜோதிட விளக்கமும்

post image

கடந்த மாதம் பிரபல ஜோதிடர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தபோது, 'இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி இல்லை. எனவே இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி என்பதை யாரும் நம்பவேண்டாம்' என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பலரும் எதிர்வினையாற்றினர். நேற்று திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில் மார்ச் 29 அன்று சனிப்பெயர்ச்சி திருநள்ளாறு ஆலயத்தில் கடைப்பிடிக்கபடவில்லை என்றும் 2026 ம் ஆண்டே சனிப்பெயர்ச்சி தொடர்பான சிறப்பான வழிபாடுகள் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதையொட்டி பக்தர்கள் நடுவே குழப்பம் ஏற்பட்டது. மார்ச் 29 -ம் தேதி சனிப்பெயர்ச்சி உண்டா இல்லையா... ஏராளமான ஜோதிடர்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் சொல்கிறார்களே... இது தவறா? என்ற கேள்வியும் எழுந்ததுள்ளது. இதுகுறித்து ஜோதிடர் பாரதி ஶ்ரீதரிடம் கேட்டோம்.

பாரதி ஶ்ரீதர்

"கோயிலில் சொல்லியிருப்பதன் பின்னணி என்ன என்பதை அறிந்துகொள்ள பஞ்சாங்கம் குறித்த விஷயங்கள் சிலவற்றைச் சொல்லவேண்டியது அவசியம். ஒவ்வொரு நாளுக்கும், 'நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம்' ஆகிய ஐந்து விஷயங்களை கணித்துச்சொல்வதுவே பஞ்சாங்கம். அந்த அடிப்படையில் எந்த நாளில் எந்த கிரகம் எந்த நிலையில் உள்ளது என்பதைக் கணக்கிட்டு கிரகப் பெயர்ச்சிகளை முன்கூட்டியே பஞ்சாங்கங்கள் சொல்லிவிடும்.

பஞ்சாங்கங்கள் ஒன்றிரண்டு அல்ல. ஏராளமானவை உள்ளன. அவற்றுள் முக்கியமானவை இரண்டு. ஒன்று திருக்கணிதம். மற்றொன்று வாக்கியம். இந்த இரண்டுமே மிகவும் பழைமையானவைதான்.

முற்காலத்தில் இன்றைக்கு இருப்பதுபோல் பால்வெளியை ஆராய உபகரணங்கள் இல்லை. என்றாலும் தங்களின் ஜோதிட அறிவால் நம் முன்னோர்கள் கிரக பெயர்ச்சிகளைத் துல்லியமாகக் கணித்தனர். அதன் அடிப்படையில் அவர்கள் உருவாக்கிய சமன்பாடுகளே (FORMULAS) பிற்காலத்தில் கிரகப் பெயர்ச்சிகளை கணிக்கப் பயன்பட்டன.

பிற்காலத்தில் துல்லியமான சில வேறுபாடுகள் கிரகப் பெயர்ச்சியில் இருப்பதை வல்லுநர்கள் கண்டுபிடித்தனர். அதை அறிவியல் அடிப்படையில் சரி செய்து பஞ்சாங்கம் கணிக்கத் தொடங்கினர். இவ்வாறு கணக்குகள் சரி செய்யப்பட்டு துல்லியப்படுத்தப்பட்ட பஞ்சாங்கமே திருக்கணிதப் பஞ்சாங்கம். இன்று திருக்கணிதம் பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

இந்திய வானியல் துறை சார்பாக நூற்றாண்டுகளாக, 'ராஷ்ட்ரிய பஞ்சாங்கம்' என்று ஒன்று வெளியிடப்படுகிறது. ராஷ்ட்ரிய பஞ்சாங்கம் திருக்கணித அடிப்படையில் ஆனதுதான். காஞ்சி மடம், திருப்பதி தேவஸ்தானம் முதலானவர்களும் திருக்கணித பஞ்சாங்கத்தையே பின் தொடர்கிறார்கள்.

வானியல்படியும் வரும் மார்ச் 29-ம் தேதி சனிபகவான் மீன ராசிக்குள் பிரவேசிக்கிறார் என்கிறார்கள் நிபுணர்கள்.

திருநள்ளாறு

பிறகு ஏன் திருநாள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி இல்லை என்கிறார்கள்?

திருநள்ளாறு முதலான கோயில்களில் வாக்கியப் பஞ்சாங்கமே கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தக் காலத்தில் ரிஷிகள் கொடுத்த சமன்பாட்டின் அடிப்படையில் தொடர்ந்து கணித்துவரும் முறையே வாக்கியப் பஞ்சாங்கம்.

முற்காலத்தில் வாக்கியப் பஞ்சாங்கத்தில் ஏற்பட்ட சிறு வித்தியாசங்கள் திருத்தப்படாமல் கூடிக் கொண்டேபோய், அதாவது நூற்றாண்டுகளுக்கு முன்பு நிமிடக் கணக்கில் ஆரம்பித்த ஒரு வித்தியாசம் இன்றைக்கு ஒவ்வொரு வருடமும் கூடிக் கூடி நிமிடம், மணியாகி, மணி நாளாகி, நாள்கள் மாதங்கள் என்ற நிலையில் வந்து நிற்கிறது.

இவைதான் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் கிரகப் பெயர்ச்சிகள் மாறுபடுவதற்கான காரணம். சில ஜோதிடர்கள் வாக்கியம் ஞானிகள் அருளியது. எனவே ஞானிகள் உருவாக்கிய வாக்கியத்தை மாற்றியமைப்பதற்கு யாருக்கும் தகுதியில்லை என்று சொல்கிறார்கள்.

உண்மையில் வாக்கியத்தைவிடத் திருக்கணிதமே காலத்தால் முற்பட்டது. ஆரியபட்டர் வராகமிகிரர் போன்ற ஞானிகள் உபதேசித்தது திருக்கணித முறையைத்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

எதை நம்புவது?

இதற்கு எளிமையான விடை சொல்லலாம். ஒரே நோய்க்கு சித்தா, ஆயுர்வேதம், அலோபதி என்று பல வைத்திய முறைகள் உள்ளன. யார் யார்க்கு எதில் உடன்பாடும் விருப்பமும் உள்ளதோ அதை அவர்கள் பின்பற்றலாம். அப்படித்தான் இந்தப் பஞ்சாங்கங்களும். காஞ்சி மகாபெரியவர் இந்தக் குழப்பத்துக்கு ஒரு விடை சொன்னார். ஜோதிட கணிப்புகளுக்கு திருக்கணிதத்தையே பின்பற்றவும் ஆலய வழிபாடுகளுக்கு வாக்கியத்தைக் கடைப்பிடிக்கவும் சொன்னார்.

சனிப்பெயர்ச்சி மார்ச் 29 நிகழ்வதை அறிவியல் பூர்வமாக நாம் அறியமுடியும். இந்த அடிப்படையில்தான் நான் உள்பட பல ஜோதிடர்கள் சனிப்பெயர்ச்சி பலன்களைச் சொல்கிறார்கள். எனவே சனிப்பெயர்ச்சி மார்ச் 29-ம் தேதிதான்.

சனி பகவான்

நீங்கள் பெயர்ச்சி பலன்களை திருக்கணிதம் மூலமாகத் தெரிந்துகொள்ளுங்கள். வழிபாடுகள், பரிகாரங்கள் ஆகிய ஆலய நடைமுறைகளுக்கு வாக்கியப் பஞ்சாங்கத்தைப் பின்பற்றிக்கொள்ளுங்கள். மற்றபடி இதில் குழப்பத்துக்கு இடமே இல்லை. மேலும் கோசார பலன்கள் என்பது 100 சதவிகிதம் துல்லியமானவை என்று சொல்வதற்கில்லை. தனிப்பட்ட ஜாதகம் மட்டுமே சரியான கணிப்புகளைத் தரமுடியும் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்."

சனிப்பெயர்ச்சி 2025: யாருக்கு ஜாக்பாட்? ; யார் கவனமாக இருக்க வேண்டும் - 12 ராசிக்குமான பலன்கள்

மேஷம்:கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். மேஷத்துக்கு ஏழரைச் சனி ஆரம்பம். ஆனாலும் மாறுபட்ட சிந்தனையால் சாதிக்கவைப்பார் சனி பகவான். செலவுகள் சுபச்செலவுகளாகும். வீட்டிலும் பணிய... மேலும் பார்க்க

சனிப்பெயர்ச்சி 2025 கன்னி: பயம் தேவையில்லை; ஆனால், கவனம்... - எப்படியிருக்கும் பெயர்ச்சி?

திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். கன்னி ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து, கண்டகச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்தக் காலத்த... மேலும் பார்க்க

சனிப்பெயர்ச்சி 2025 மகரம் : `தொட்டதெல்லாம் துலங்கும்' - கவனமாக இருக்கவேண்டிய சில விஷயங்கள் எவை?

திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். மகர ராசிக்கு 3-ம் இடத்திலிருந்து பலன் தரப்போகிறார். இனி, வரும் காலம் உங்களுக்குப் பொற்காலம் எனல... மேலும் பார்க்க

சனிப்பெயர்ச்சி 2025 கடகம் : `வரப்போகும் நல்ல செய்தி' - இனி எப்படி இருக்கப்போகிறது?

திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். கடக ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். அஷ்டமத்துச் சனி விலகப்போகிறது; இனி, உங்க... மேலும் பார்க்க