தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு உயர்ந்தது?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.65,560-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை கடந்த மாா்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்ட நிலையில், மாா்ச் 21 ஆம் தேதி பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 66,160-க்கும், மாா்ச் 22 ஆம் தேதி மீண்டும் பவுனுக்கு ரூ. 320 குறைந்து ரூ. 65,840-க்கும், மாா்ச் 23-இல் விலை மாற்றமின்றியும் விற்பனையானது.
நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!
தொடா்ந்து திங்கள்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 65,720-க்கும் விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ. 8,185-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 65,480-க்கும் விற்பனையானது. கடந்த 5 நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,000 குறைந்தது.
இந்த நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.8,195-க்கும், பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.65,560-க்கு விற்பனையாகிறது.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்
வெள்ளி விலை நிலவரம்
தொடா்ந்து 3 நாள்களாக எவ்வித மாற்றமுமின்றி கிராம் ரூ. 110-க்கு விற்பனையாகி வந்த வெள்ளி விலையில் புதன்கிழமை மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.109.90-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,09,000-க்கும் விற்பனையாகிறது.