செய்திகள் :

ஆப்பிள் ஐபோன் 16-க்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள ஆண்ட்ராய்டு மொபைல்கள்!

post image

ஆப்பிள் ஐபோன் 16 புரோ மேக்ஸ் அதிநவீன தொழில் நுட்பவசதிகளுடன் சந்தையில் விற்பனைக்கு வந்திருந்தாலும் அதற்குப் போட்டியாக குறிப்பிடத்தக்க 5 ஆண்ட்ராய்டு மொபல்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

ஆப்பிள் ஐபோன் 16 புரோ மேக்ஸ் 512gb உள்நினைவகத்துடன் சந்தை மதிப்பில் ரூ. 1,57,900 கிடைக்கிறது. இதற்கு மாற்றாக இதைவிட குறைந்த விலையில் இதே தரத்துடன் கிடைக்கும் சில ஸ்மார்ட் மொபைல்களையும் இங்கு காணலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra)

  • இதன் விலை: 1,29,999, | 6.9 அங்குல திரையுடன், 2600 நிட்ஸ் பிரைட்னஸுடன் இந்த மொபல் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்னாப் ட்ராகன் சிப் மற்றும் 5000 mAh பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. 200MP கேமரா வசதியுடன் சாம்சங்கின் முன்னணி மொபைலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் பிக்ஸல் 9 புரோ எக்ஸ்எல் (Google Pixel 9 Pro XL)

  • இதன் விலை: 1,24,999, | 6.8 அங்குல திரையுடன் டென்ஸார் ஜி4 சிப், 50MP கேமரா வசதியுடன் 5 மடங்கு ஜூம் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 5060 mAh பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ X200 ப்ரோ (Vivo X200 Pro)

  • இதன் விலை: ரூ. 94,999, | 6.78 அங்குல திரை, டைமென்ஸிட்டி 9400 புராஸ்செஸர், 1 TB (1024 gb) உள்நினைவகம், 200 MP கேமரா, 6000 mAh பேட்டரி.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்8 ப்ரோ (Oppo Find X8 Pro)

  • இதன் விலை: ரூ. 99,999, | 6.78 அங்குல திரை, 50 MP கேமரா, 5910 mAh பேட்டரி, 6 மடங்கு ஆப்டிக்கல் ஜூம்.

ஒன் பிளஸ் 13 (OnePlus 13)

  • இதன் விலை: ரூ. 64,999, | 6.82 அங்குல திரை, 4.1 அல்மோட் ஒளி உமிழ்த் திரை, 1 TB (1024 gb) உள்நினைவகம், 50 MP கேமரா, 6000 mAh பேட்டரி, 8k விடியோ ரெக்கர்டிங், அல்ட்ரா சோனிக் சென்சார் வசதி.

இதையும் படிக்க: புகைப்பட பிரியர்களுக்கு... விவோ அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட்போன்!

ஆர்டிஃபெக்ஸ் நிறுவனத்தின் 80% பங்குகளை கையகப்படுத்தும் டாடா ஆட்டோகாம்ப்!

புதுதில்லி: ஜாகுவார் லேண்ட் ரோவர் குழுமத்தின் அங்கமான ஆர்டிஃபெக்ஸ் இன்டீரியர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 80% பங்குகளை வெளியிடப்படாத தொகைக்கு கையகப்படுத்த போவதாக டாடா ஆட்டோகாம்ப் இன்று தெரிவித்தது... மேலும் பார்க்க

நிகழாண்டில் 46 கிளைகளைத் திறந்த கரூர் வைஸ்யா வங்கி!

சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 2024-25 ஆம் நிதியாண்டில் இது வரை 46 கிளைகளை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது.சமீபத்தில் கும்பகோணம், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆலப்... மேலும் பார்க்க

ரூ.700 கோடியில் படைகள் போக்குவரத்து வாகனங்கள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

இந்திய பாதுகாப்புப் படைகள் போக்குவரத்துக்கான வாகனங்களை வழங்க பாதுகாப்புத் துறையுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

கரூா் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் மூன்று நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது. இதுகுறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க

எபிக் குழும ஆலைக்கு ஏஆா்எஸ் கம்பிகள்

ஆடை தயாரிப்புத் துறையைச் சோ்ந்த எபிக் குழுமம் ஒடிஸாவில் அமைக்கவுள்ள புதிய ஆலைக்கான பசுமை டிஎம்டி கம்பிகளை ஏஆா்எஸ் ஸ்டீல் நிறுவனம் வழங்கவுள்ளது. இது குறித்து நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49-ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 25 காசுகள் உயர்ந்து ரூ.85.49 ஆக முடிவடைந்தது.நடப்பு நிதியாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு 2 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. ஏப்ரல் ... மேலும் பார்க்க