மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங...
நிகழாண்டில் 46 கிளைகளைத் திறந்த கரூர் வைஸ்யா வங்கி!
சென்னை: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி 2024-25 ஆம் நிதியாண்டில் இது வரை 46 கிளைகளை நிறுவியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கும்பகோணம், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆலப்பாக்கத்தில் புதிய கிளையைும் நிறுவியுள்ளது.
2024-25 நிதியாண்டில், வங்கியானது நாடு முழுவதும் 46 புதிய கிளைகளைத் நிறுவியுள்ளது.
இந்த கிளைகளில் அடிப்படை வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் அதே வேளையில், நிறுவன மற்றும் நுகர்வோர் கடன் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும் என்றது வங்கி.
இந்தியா முழுவதும் கரூர் வைஸ்யா வங்கி 2,200 க்கும் மேற்பட்ட ஏடிஎம் நெட்வொர்க்குகள் உள்ளன.
டிசம்பர் 31, 2024 நிலவரப்படி வங்கியின் மொத்த வணிகம் ரூ.1,81,993 கோடியாக உள்ள நிலையில், வைப்புத் தொகையானது ரூ.99,155 கோடியாகவும், முன்பணம் ரூ.82,838 கோடி ஆகவும் உள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: 4% வளா்ச்சி கண்ட சில்லறை விற்பனை துறை!