Parliament ; Assembly : அனல் பறந்த விவாதங்கள்! | விரக்தியில் Annamalai BJP | Imp...
`சரியான முதலீட்டுத் திட்டங்களை தேர்ந்தெடுப்பது எப்படி?' - நாணயம் விகடன் நடத்தும் ஆன்லைன் வகுப்பு
நாம் முதலீடு செய்யும் போது, நம் நிதி இலக்குகளை (Financial Gols) நிர்ணயம் செய்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும், அப்போது அதற்காக முதலீட்டுத் திட்டங்களை (Investment Products) தேர்வு செய்வோம். ஒவ்வொரு முதலீட்டுத் திட்டமும் சாதக பாதகங்களை கொண்டிருக்கும். அவற்றை தெரிந்து கொள்வதன் மூலம் நாம் அதிக பலன்களை பெற முடியும்.

நாணயம் விகடன், முதலீட்டுத் திட்டங்களை சரியாக தேர்ந்தெடுப்பது எப்படி? என்கிற ஆன்லைன் கட்டண வகுப்பை நடத்துகிறது.
இந்த நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 19, சனிக் கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை நடக்கிறது. கட்டணம் ஒருவருக்கு ரூ. 300 மட்டுமே. Winworthwealth.com நிறுவனர் எஸ்.கார்த்திகேயன் பயிற்சி அளிக்கிறார்.
பயிற்சியாளர் பற்றி..
எஸ். கார்த்திகேயன் சுமார் 35 வருடங்களாக நிதி ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். காப்பீடு தொடங்கி காமாடிட்டி வரை பலவிதமான முதலீட்டுத் திட்டங்கள் குறித்து அறிந்து வைத்திருக்கிறார்.
தனிநபர் நிதி மேலாண்மை என்கிற ‘பர்சனல் ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட்’ கற்றுத் தருவதற்காக, எஸ். கார்த்திகேயன் மற்றும் குழந்தை உளவியல் நிபுணர் ஸ்வப்னா பாபு ஆகியோர் இணைந்து வீல் அகாடமி (weal academy) நடத்தி வருகிறார்கள். இதில் 7 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கு பர்சனாலிட்டி டெவலப்மென்ட் மற்றும் ஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் கற்றுத் தரப்படுகிறது.
இந்தப் பயிற்சியில் கற்று தரப்படுவை:
முக்கிய முதலீட்டுத் திட்டங்கள், எந்த நிதித் தேவைக்கு எந்த முதலீடு, குறுகிய காலம், நடுத்தர காலம் மற்றும் நீண்ட காலத்துக்கு ஏற்ற முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விளக்கி சொல்லப்படுகிறது.

இவை தவிர ஆயுள் காப்பீடும் மருத்துவக் காப்பீடுகள், வீட்டுக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கற்றுத் தரப்படுகிறது.
ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள், கடன் ஃபண்டுகள், பங்குச் சந்தை, பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி திட்டங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகளின் சாதக பாதகங்கள் விளக்கி சொல்லப்படுகிறது. முதலீட்டாளர்கள் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை இந்த நிகழ்ச்சியில் நிவர்த்தி செய்ய முடியும். முன்பதிவு செய்ய https://bit.ly/4ikMZNn