வருண் சக்கரவர்த்தி தாக்கத்தை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்: ரவி சாஸ்திரி
SEBI: மீண்டும் சிக்கலில் Ex செபி தலைவர் மாதபி பூரி புச்; `5 பேர் மீது FIR பதிவு' - நீதிமன்றம் அதிரடி
அதானி குழும பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கை வெளியிட்டது. இதில் அப்போதைய செபி அமைப்பின் தலைவர் மாதபி பூரிபுச்-க்கும் தொடர்பு இருக்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மாதபி பதவி விலகவேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.
இந்த நிலையில், அவர் பதவி விலக்கப்பட்டு, புதிய செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து, செபி முன்னாள் தலைவர் மாதபி பூரி புச் உள்ளிட்ட 5 பேர் மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டுமென பத்திரிகையாளர் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத்ராவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ``முன்னாள் செபி தலைவர் மாதபி பூரிபுச், மற்ற மூன்று செபி அதிகாரிகள், முன்னாள் பி.எஸ்.இ தலைவர் பிரமோத் அகர்வால், பி.எஸ்.இ தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவேண்டும்" எனக் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
