நீங்க பணக்காரர் ஆகணுமா? இந்த நம்பர் 1 தவறை செய்யாதீங்க!
நல்லா உழைக்கிறீங்க, டீசண்டான சம்பளமும் வாங்குறீங்க, வாழ்க்கைல நல்ல நிலைமைக்கு முன்னேறணும்னு கனவும் இருக்கு... ஆனா, நீங்க எவ்வளவு மெனெக்கெட்டாலும், உங்களோட சேமிப்பு வேகமா வளர மாட்டேங்குதா? வருங்காலத்துக்காக நீங்க சேர்க்கும் பணமும், பண்ணும் முதலீடும் உங்க வருங்கால இலக்கை நோக்கி கரெக்ட்டா போயிட்டு இருக்கான்னு சந்தேகமாவே இருக்கா?

கிட்டத்தட்ட 30-40+ வயதுகளில் இருக்கிறவங்களுக்கு உள்ள பொதுவான பிரச்னைதான் இது. நீங்க நினைச்ச மாதிரியான வாழ்க்கை வாழ உங்களுக்குத் தேவை என்ன தெரியுமா? உங்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு பொருளாதார யுக்தி. இது இல்லாம இருப்பதுதான் உங்களைப் பணக்காரர் ஆகவிடாம தடுக்கும் நம்பர் 1 தவறு! இதை சரி செய்யலைன்னா நீங்க நினைச்ச விஷயங்களை கண்டிப்பா அடையவே முடியாது!
பொருளாதார யுக்தி இல்லாமை - இந்த 4 விஷயங்கள்தான் பிரச்னை...
* பொருளாதார திட்டம் இல்லாம இருப்பது: நல்லா சம்பாதிச்சா மட்டும் போதாது, அந்தப் பணத்தை எப்படி நிர்வாகம் பண்ணணும்னும் தெரியணும்.
* வளராத இடத்தில் சேமிப்பு & முதலீடு: நிறைய பேர் சேமிப்பும் முதலீடும் பண்ணாலும், சரியான இடத்தில் அதைப் பண்ணுவதில்லை. அதனால அவை வளராமலே போயிடுது.
* ரிட்டைர்மென்ட் பத்தி யோசிக்காம இருப்பது: ஏதோ ஒரு கட்டத்துல நம்ம சம்பளம் நின்னு போகும். அந்த நேரத்துல ரிட்டைர்மென்ட் பத்தி யோசிச்சு ஒரு பலனும் இல்ல. நல்லா சம்பாதிக்கும்போதே அதைப்பத்தி சிந்திக்கணும்.
* வாய்ப்புகளை தவற விடுவது: வரியை மிச்சப்படுத்தும் வழிகள், விதவிதமான முதலீடுகள், புதுப்புது பொருளாதார யுக்திகள் - இதையெல்லாம் பத்தி சிந்திக்காமலே இருப்பது.

இதுக்கெல்லாம் ஒரு தீர்வு வேணுமா? 'பட்ஜெட் முதல் ரிட்டைர்மென்ட் வரை' வெபினார் வீடியோ உங்களுக்காக...
உங்களோட பொருளாதாரத்தை சரியான முறையில் கட்டமைக்கணுமா? உங்க பணத்தை சேமிப்பது எப்படி? பட்ஜெட் போடுவது எப்படி? முதலீடு செய்வது எப்படி என்பதையெல்லாம் தெரிஞ்சுக்கணுமா? விகடன் 'லாபம்' வழங்கும் 'பட்ஜெட் முதல் ரிட்டைர்மென்ட் வரை' வெபினார் வீடியோ, உங்களுக்குத் தேவையான பொருளாதார அடிப்படைகளை கத்துக்கொடுக்கும். தனி நபர் பொருளாதார அடிப்படைகள் பத்தி வெல்த் அட்வைசர் சுந்தரி ஜெகதீசன் அவர்களும், மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் பத்தி முன்னாள் நாணயம் விகடன் எடிட்டர் ஏ.ஆர்.குமார் அவர்களும் இதில் பேசியிருக்காங்க.
* ஸ்மார்ட்டா பட்ஜெட் போடுவது எப்படி?
* உங்க லைஃப்ஸ்டைலை குறைச்சுக்காம சேமிப்பது எப்படி?
* நிதி இலக்குகளை தேர்ந்தெடுப்பது எப்படி?* என்னென்ன முதலீட்டு வாய்ப்புகள் இருக்கு?
* ரிட்டையர்மென்டுக்கு எப்படி பிளான் பண்ணனும்?
* மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி?
* மியூச்சுவல் ஃபண்டு மூலம் உங்க நிதி இலக்குகளை அடைவது எப்படி?

மேற்கண்ட விஷயங்களை எல்லாம் இந்த வீடியோவில் இருந்து நீங்க கத்துக்கலாம். மறக்காம ஒரு பேனாவும் பேப்பரும் வெச்சுக்கிட்டு இந்த வீடியோவைப் பார்த்து நோட்ஸ் எடுத்துக்கோங்க! உங்க வாழ்க்கைல பொருளாதார பிரச்னையே வராம இருக்கணுமா? வெபினார் வீடியோ லிங்க் பெற முன்பதிவு செய்யுங்க. ரெஜிஸ்ட்ரேஷன் லிங்க்: https://forms.gle/E82xnPHYF43GBFtJ8