செய்திகள் :

டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இலங்கை அணி!

post image

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை மகளிரணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி வென்ற நிலையில், டி20 தொடர் இன்று (மார்ச் 14) தொடங்கியது.

இதையும் படிக்க: ராகுல் டிராவிட்டுடன் மீண்டும் இணைவது குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (மார்ச் 14) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் எம்மா மெக்லியாடு அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சூஸி பேட்ஸ் 21 ரன்களும், ஜெஸ் கெர் 10 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இலங்கை தரப்பில் மல்கி மதாரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, இனோஷி பிரியதர்ஷினி மற்றும் கவிஷா தில்ஹாரி தலா 2 விக்கெட்டுகளையும், சுகந்திகா குமாரி மற்றும் சமாரி அத்தப்பத்து தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: ரிஷப் பந்த் தனித்துவமான வீரர்; முன்னாள் விக்கெட் கீப்பர் புகழாரம்!

வெற்றியுடன் தொடங்கிய இலங்கை

102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 14.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இலங்கை அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சமாரி அத்தப்பத்து 48 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கவிஷா தில்ஹாரி மற்றும் நிலாக்‌ஷி டி சில்வா தலா 12 ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து தரப்பில் ஜெஸ் கெர் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சிறப்பாக செயல்பட்ட மல்கி மதாராவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் அரையிறுதி: இலங்கைக்கு 180 ரன்கள் இலக்கு!

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடரில் இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது.சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில்... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்திய ஐபிஎல் தொடர்: தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட்டின் தரத்தினை ஐபிஎல் தொடர் உயர்த்தியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொட... மேலும் பார்க்க

ராகுல் டிராவிட்டுடன் மீண்டும் இணைவது குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராகுல் டிராவிட்டுடன் இணைந்து செயல்படுவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேசியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயி... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் தனித்துவமான வீரர்; முன்னாள் விக்கெட் கீப்பர் புகழாரம்!

ரிஷப் பந்த் மிகவும் தனித்துவமான வீரர் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் புகழாரம் சூட்டியுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரில் மார்ச் 22 ஆம் ... மேலும் பார்க்க

ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளைத் தவறவிடும் பும்ரா! மும்பை அணிக்கு பின்னடைவா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரருமான ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

புதிய மத்திய ஒப்பந்தங்களை அறிவித்த வங்கதேச கிரிக்கெட் வாரியம்!

2025 ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில், மொத்தமாக 22 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெற்... மேலும் பார்க்க