இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்திய ஐபிஎல் தொடர்: தினேஷ் கார்த்திக்
இந்திய கிரிக்கெட்டின் தரத்தினை ஐபிஎல் தொடர் உயர்த்தியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: ராகுல் டிராவிட்டுடன் மீண்டும் இணைவது குறித்து மனம் திறந்த சஞ்சு சாம்சன்!
தினேஷ் கார்த்திக் கூறியதென்ன?
விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட்டின் தரத்தினை ஐபிஎல் தொடர் உயர்த்தியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடர் அனைத்து வீரர்களுக்குள் இருக்கும் வெற்றி பெறும் மனநிலையை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஐபிஎல் தொடருக்கு கிடைக்கும் பணம் மற்றும் பொருளாதார அம்சங்கள் பலவும் நாட்டில் கிரிக்கெட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு அடையும்போது, விளையாட்டின் தரமும் அதிகரிக்கிறது.
இதையும் படிக்க: ரிஷப் பந்த் தனித்துவமான வீரர்; முன்னாள் விக்கெட் கீப்பர் புகழாரம்!
இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக ஐபிஎல் தொடர் மாறியுள்ளதால், இந்திய அணியால் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தரமான அணிகளை விளையாட வைக்க முடியும். இந்திய அணி தற்போது அதிக அளவிலான திறமை வாய்ந்த வீரர்களைக் கொண்டுள்ளது என்றார்.