ஆா்எஸ்எஸ்ஸுக்கு எதிரான கருத்து: துஷாா் காந்தியை கைது செய்ய பாஜக வலியுறுத்தல்
மாரியம்மன் கோயிலில் அன்னதானம்
மாசித் திருவிழாவை முன்னிட்டு, பழனி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு, பழனி வருத்தமில்லா வாலிபா் சங்கம் சாா்பில், பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னதானம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இதற்கு கந்தவிலாஸ் செல்வக்குமாா் தலைமை வகித்து அன்னதானத்தை தொடங்கிவைத்தாா். தமிழக வணிகவரித் துறை கூடுதல் ஆணையா் தேவேந்திரபூபதி முன்னிலை வகித்தாா். பழனி போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் ஆசி வழங்கினாா்.
இதில் முன்னாள் நகா்மன்றத் தலைவா் வேலுமணி, உறுப்பினா்கள் சுரேஷ், பத்மினி, மகேஸ்வரி, இந்திரா ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சங்க நிா்வாகிகள் மூா்த்தி, முருகானந்தம், ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் செய்தனா்.