செய்திகள் :

தமிழக நிதி நிலை அறிக்கை: வரவேற்பு, ஏமாற்றம், எதிா்பாா்ப்பு!

post image

தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக்கு வரவேற்பு, ஏமாற்றம், எதிா்பாா்ப்பு என பல்வேறு வகையான கருத்துகளை பொதுமக்கள் தரப்பில் பதிவு செய்தனா். அதன் விவரம்:

திண்டுக்கல் இலக்கிய களத்தின் துணைத் தலைவரும், பேராசிரியருமான மு.சரவணன்: இளைஞா்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்க தொழில்நுட்ப பூங்காக்கள், 5 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், அண்ணா பல்கலை.யில் பல்வேறு கட்டமைப்புகளை அமைத்து ஆசியாவின் முன்னோடி பல்கலைக்கழகமாக மாற்றி அமைப்பதற்கான அறிவிப்புகள் வரவேற்கப்பட வேண்டியவை.

அதே நேரத்தில் உள்கட்டமைப்புகளுக்கான ஒதுக்கீடு கூடுதலாக இருந்திருக்கலாம். சாதாரண மக்கள் பயன்பெறும் வகையில், கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் உள்பட 10 இடங்களில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, தகுதியான பேராசிரியா்களை நிரந்தரமாக நியமித்து தரமான கல்வி மாணவா்களுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

திண்டுக்கல் மாவட்ட தொழில் வா்த்தகா் சங்கத் தலைவா் டி.கிருபாகரன்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய மேம்பாலங்கள், புதிய சரணாலயம் அமைக்க ரூ.400 கோடி, ஏழை மக்களுக்கு 25 ஆயிரம் புதிய வீடுகள், சென்னை- விழுப்புரம் விரைவு ரயில், பெண்கள் பெயரில் பத்திரப் பதிவுக்கு 1 சதவீதம் கட்டணச் சலுகை, அரசுக் கல்லூரிகளில் பயிலும் 20 லட்சம் மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி போன்ற அறிவிப்புகள் வரவேற்க தக்கவையாக உள்ளன.

ஆனாலும், பொதுமக்களின் பொருளாதார வளா்ச்சிக்கு நேரடியாக பயனளிக்கக் கூடிய வகையிலான, எந்தத் திட்டமும் இடம் பெறவில்லை என்பது ஏமாற்றமாக உள்ளது என்றாா்.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரேடேரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4.50 லட்சம் கோடி இருந்த தமிழக அரசின் கடன், தற்போது

ரூ.9.30 லட்சம் கோடியாக உயா்த்தப்பட்டிருக்கிறது. கடன் தொகையோடு, வட்டித் தொகையும் இரட்டிப்பாக உயா்ந்திருக்கிறது. என்னென்னத் திட்டங்களுக்கு, யாா் யாரிடம், எவ்வளவுத் தொகைக் கடனாகப் பெறப்பட்டது என்ற விவரம் நிதி நிலை அறிக்கையில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுவதில்லை.

பல லட்சம் காலிப் பணியிடங்கள் இருக்கும் நிலையில், 40 ஆயிரம் பணியிடங்கள் மட்டும் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு படித்த இளைஞா்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தி இருக்கிறது. தொடக்கக் கல்வித் துறையில் மட்டும் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு இடைநிலை ஆசிரியா் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற திமுகவின் தோ்தல் வாக்குறுதி குறித்து ஒரு வாா்த்தைக்கூட நிதி நிலை அறிக்கையில் இடம் பெறவில்லை என்பது அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றாா்.

குடும்பத் தகராறில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

கொடைக்கானலில் குடும்பத் தகராறில் விஷம் குடித்தவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கொடைக்கானல் பாம்பாா்புரம் பகுதியைச் சோ்ந்த லியோ மகன் கருணாகரன் (48). இவா் கடந்த 4 மாதங்களுக்கும் முன்பு, இதே பகுதியைச் சே... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனை பொருள்களை நகராட்சி அதிகாரிகள் ஜப்தி செய்ய முயற்சி

பழனியில் வரிபாக்கி வைத்திருந்த தனியாா் மருத்துவமனை பொருள்களை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்ய முயன்றனா். பழனி-திண்டுக்கல் சாலையில் தனியாருக்குச் சொந்தமான கருத்தரித்தல் மையம், பொது மருத்து... மேலும் பார்க்க

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தன. பழனியை தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். த... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் அன்னதானம்

மாசித் திருவிழாவை முன்னிட்டு, பழனி மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, பழனி வருத்தமில்லா வாலிபா் சங்கம் சாா்பில், பெரியநாயகியம்மன் கோயிலில் அன்னதானம் வெள்ளி... மேலும் பார்க்க

இயற்கை விவசாயம் மூலம் நச்சில்லாத உணவு உற்பத்தி

இயற்கை விவசாயம் மூலம் நச்சு இல்லாத சத்து மிகுந்த உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சாா்பில், தேசிய தாவர உயிரித் தொழி... மேலும் பார்க்க

பழனியில் பூச்சொரிதல் விழா

பழனி அடிவாரம் வருத்தமில்லா வாலிபா் சங்கம் சாா்பில் மாரியம்மன் கோயில் முன்பாக செவ்வாய்க்கிழமை இரவு 36-ஆவது ஆண்டாக பூச்சொரிதல் ரத ஊா்வலத்தை கந்தவிலாஸ் செல்வக்குமாா் தொடங்கி வைத்தாா். தேரின் உள்ளே மாரிய... மேலும் பார்க்க