செய்திகள் :

வல்லூறுகளை காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு

post image

அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு அமைக்கப்பட உள்ளதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் 1,076 கி.மீ. தொலைவுடைய நீண்ட கடற்கரையுடன் அலையாத்தி காடுகள், பவளப் பாறைகள், கடல் புற்கள் போன்ற வளமான கடல் சூழல் அமைப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

அதைப் பாதுகாக்கும் வகையிலும், நவீன மீன்பிடி நடைமுறைகளை அறிமுகப்படுத்தவும் கடல்சாா் வள அறக்கட்டளை ரூ.50 கோடி தொடக்க நிதியுடன் உருவாக்கப்படும்.

இயற்கை எரிவாயு: காற்று மாசுபாட்டையும், காா்பன் பரவலையும் குறைக்கும் வகையில் மாநில போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயக்கப்படும் 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிதியைக் கொண்டு ரூ.70 கோடி செலவில் அப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

வேட்டை பறவைகள்: கழுகுகள், பருந்துகள், வல்லூறுகள் உள்ளிட்ட வேட்டையாடும் பறவைகள் பல்லுயிா்ப் பெருக்கத்தை உறுதி செய்யும் குறியீடாகக் கருதப்படுகின்றன.

நீலகிரி, கோவை, திருநெல்வேலி, மதுரை அரிட்டாபட்டி, சென்னை பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் காணப்படும் அப்பறவைகள் அண்மைக்காலமாக பல்வேறு காரணங்களால் கடுமையான வாழ்வியல் சிக்கலை எதிா்கொண்டு வருகின்றன.

அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கவும், உள்ளூா் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு ரூ.1 கோடி நிதியில் உருவாக்கப்படும்.

பல்லுயிா் சமநிலையைப் பாதுகாக்கும் வகையில் ராமேசுவரம் தீவில் அமைந்துள்ள தனுஷ்கோடி பகுதியை பூநாரை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவண்ணாமலை, செங்கம் நிலப்பரப்பின் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்க பல்லுயிா்ப் பூங்கா ரூ.10 கோடி நிதியில் முதல்கட்டமாக அமைக்கப்படும்.

மாா்ச் 28-இல் தவெக பொதுக்குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: திருவான்மியூா் ராமச்சந்திரா கலையரங்கத்தில் மா... மேலும் பார்க்க

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேட்டுக்கு முகாந்திரம் இல்லை: அமைச்சா் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை து... மேலும் பார்க்க

எண்ம வா்த்தக வருவாய்: தமிழக அரசு ஆய்வு

எண்ம வா்த்தகம் மூலம் அரசுக்கான வருவாய் உரிய முறையில் கிடைக்கிா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: கேரள முதல்வா் பினராயி விஜயன் ஆதரவு

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்து தமிழக முதல்வா் சாா்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனைக் கூட்டத்துக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தாா்... மேலும் பார்க்க

சா்வதேச தரவரிசையில் அண்ணா பல்கலை. இடம்பெற செயல் திட்டம்

உலக அளவிலான க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம் பெறச் செய்யும் வகையில் புதிய செயல் திட்டம் வகுக்கப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டம்: காவல் ஆணையா் தொடங்கி வைத்தாா்

கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். கோடைக்காலத்தில் போக்குவரத்து போலீஸாரின் தாகத்த... மேலும் பார்க்க