Perusu: ``எங்க அண்ணன் வெங்கட் பிரபுவே `டேய்'னு கேட்டாரு!'' - நடிகர் வைபவ்
கார்த்திக் சுப்புராஜின் `ஸ்டோன் பென்ச்' நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வெளியாகியிருக்கிறது `பெருசு' திரைப்படம். வைபவ், நிகாரிகா, சுனில், தீபா, சாந்தினி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற இத்திரைப்படத்தை இயக்குநர் இளங்கோ ராமநாதன் இயக்கியிருக்கிறார். செய்தியாளர்களுக்கு சிறப்புக் காட்சி முடிவு பெற்றதும் நடிகர் வைபவ் இத்திரைப்படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

நடிகர் வைபவ், `` இந்தப் படத்தை தொடங்கும்போது கார்த்திக் சுப்புராஜ் `உங்க அப்பாகிட்ட கதையைப் பத்தி சொல்லுங்க'னு சொன்னாங்க. நானும் அப்பாகிட்ட இந்தப் படத்தை பத்தி சொன்னேன். அவரும் `ரொம்ப புதுசா இருக்கு டா. வழக்கமான கதைகளைப் பார்க்க மக்கள் திரையரங்குகளுக்கு வர்றது கஷ்டமாக இருக்கு. திரைக்கதையை வலுவாக அமைச்சு. முகம் சுழிக்காமல் எடுத்துட்டால் நல்லா இருக்கும்'னு அப்பாதான் முதன் முதலாக இந்தப் படத்துக்கு ஓகே சொன்னாரு. படம் முடிச்சிட்டு அவருக்குப் படத்தை போட்டுக் காமிச்சோம். முகம் சுழிக்கிற மாதிரியான சீன்ஸ் எதுவும் அவங்களுக்கு தெரிஞ்சா தூக்கிடலாம்னுதான் யோசிச்சோம். இன்னைக்கு திரையரங்குகள்ல பெண்கள்தான் அதிகமாக படத்தை பார்த்து சிரிச்சிட்டு இருக்காங்க. " என்றவரிடம் படத்திற்கான கதாபாத்திரத்துக்கு தயாரான முறை குறித்து நகைச்சுவையாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, `` அப்படிலாம் இல்ல சார். எங்க அண்ணன் வெங்கட் பிரபுவே கதைய பாத்துட்டு `டேய்'னு சொன்னாரு." எனக் கூறினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
