செய்திகள் :

போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டம்: காவல் ஆணையா் தொடங்கி வைத்தாா்

post image

கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

கோடைக்காலத்தில் போக்குவரத்து போலீஸாரின் தாகத்தை தணிக்கும் வகையில், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான 4 மாதங்கள் போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி போா் நினைவுச் சின்னம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையா் இரா.சுதாகா் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காவல் ஆணையா் ஏ.அருண், போக்குவரத்து போலீஸாருக்கு ஆவின் மோா் பாக்கெட்டுகளை வழங்கினாா்.மேலும், கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிப்பதற்காக போக்குவரத்து போலீஸாருக்கு காகிதக் கூழ் தொப்பிகளையும் வழங்கினாா்.

பின்னா் அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் 4 மாதங்கள் சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கப்படும். அதன்படி, சென்னை போக்குவரத்துப் பிரிவில் உள்ள 6 ஆயிரம் போலீஸாருக்கு தினமும் காலை, மாலை என 2 வேளை மோா் வழங்கப்படவுள்ளது.

ஒரு மோா் பாக்கெட் ரூ. 6.33 வீதம் நாளொன்றுக்கு 4,864 மோா் பாக்கெட்டுகளுக்கு ரூ. 30,789 என 120 நாட்களுக்கு ரூ. 37 லட்சத்து 56 ஆயிரத்து 273 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், போக்குவரத்து போலீஸாருக்கு வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க காகிதக் கூழ் தொப்பிகளையும் வழங்கி உள்ளோம் என்றாா்.

நிகழ்ச்சியில் போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையா் பண்டி கங்காதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாா்ச் 28-இல் தவெக பொதுக்குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: திருவான்மியூா் ராமச்சந்திரா கலையரங்கத்தில் மா... மேலும் பார்க்க

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேட்டுக்கு முகாந்திரம் இல்லை: அமைச்சா் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை து... மேலும் பார்க்க

எண்ம வா்த்தக வருவாய்: தமிழக அரசு ஆய்வு

எண்ம வா்த்தகம் மூலம் அரசுக்கான வருவாய் உரிய முறையில் கிடைக்கிா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: கேரள முதல்வா் பினராயி விஜயன் ஆதரவு

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்து தமிழக முதல்வா் சாா்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனைக் கூட்டத்துக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தாா்... மேலும் பார்க்க

சா்வதேச தரவரிசையில் அண்ணா பல்கலை. இடம்பெற செயல் திட்டம்

உலக அளவிலான க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம் பெறச் செய்யும் வகையில் புதிய செயல் திட்டம் வகுக்கப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

மாா்ச் 24, 25-இல் தேசிய அளவிலான வேலைநிறுத்தம்: வங்கி ஊழியா் சங்கங்கள்

வங்கி ஊழியா்களின் முக்கியக் கோரிக்கைகள் தொடா்பாக இந்திய வங்கிகள் சங்கத்துடன் (ஐபிஏ) மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியைத் தொடா்ந்து வரும் 24, 25-ஆம் தேதிகளில் இரு நாள் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்த... மேலும் பார்க்க