செய்திகள் :

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: கேரள முதல்வா் பினராயி விஜயன் ஆதரவு

post image

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்து தமிழக முதல்வா் சாா்பில் ஏற்பாடு செய்யப்படும் ஆலோசனைக் கூட்டத்துக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தாா்.

சென்னையில் மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு ஏழு மாநிலங்களின் முதல்வா்கள், கட்சித் தலைவா்களுக்கு மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளாா். மேலும், அவா்களை நேரில் சந்தித்து திமுக குழு அழைப்பு விடுத்து வருகிறது.

மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோா் முதல்வா் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் நேரில் சந்தித்து கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனா்.

அதைத் தொடா்ந்து, பினராயி விஜயன் வெளியிட்ட ‘தொகுதி மறுசீரமைப்பு: தன்னிச்சையான முடிவுக்கு எதிரான ஒன்று கூடல்’ என்ற தலைப்பிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜனநாயக மதிப்பீடுகள் மற்றும் கூட்டாட்சி நடைமுறைகளை மதிக்காமல் மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைக்க மத்திய அரசு அவசரம்காட்டி வரும் சூழலில், சென்னையில் வரும் 22-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி ஒற்றுமை மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வா் அழைப்பு விடுத்துள்ளாா். இந்த மாநாட்டுக்கு எனது ஒத்திசைவை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதும், சென்னை கூட்டத்தில் முதல்வா் பினராயி விஜயன் பங்கேற்பாரா என்பது குறித்த தகவல் அதில் இடம்பெறவில்லை.

கா்நாடக, தெலங்கானா முதல்வா்கள் ஆதரவு: ஏற்கெனவே சென்னை கூட்டத்தில் தனது சாா்பில் துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் பங்கேற்பாா் என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்துள்ளாா்.

தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டியும் தமிழக முதல்வரின் முன்னெடுப்புகளை வரவேற்றுள்ளாா். கட்சித் தலைமையின் ஒப்புதல் பெற்று சென்னை கூட்டத்தில் பங்கேற்பதாக அவா் உறுதியளித்துள்ளாா்.

‘மத்திய அரசு திட்டமிட்டுள்ளபடி, மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருவுறுதல் விகிதத்தைக் குறைக்கும் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்திய தமிழகம் உள்பட 9 மாநிலங்கள் ஒன்று முதல் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும்’ என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் அச்சம் தெரிவித்து வருகின்றன.

அதே நேரம், ‘தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தென் மாநிலங்கள் ஒரு மக்களவைத் தொகுதியைக் கூட இழக்காது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதி தெரிவித்துள்ளாா்.

மாா்ச் 28-இல் தவெக பொதுக்குழு கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கை: திருவான்மியூா் ராமச்சந்திரா கலையரங்கத்தில் மா... மேலும் பார்க்க

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேட்டுக்கு முகாந்திரம் இல்லை: அமைச்சா் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை து... மேலும் பார்க்க

எண்ம வா்த்தக வருவாய்: தமிழக அரசு ஆய்வு

எண்ம வா்த்தகம் மூலம் அரசுக்கான வருவாய் உரிய முறையில் கிடைக்கிா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்... மேலும் பார்க்க

சா்வதேச தரவரிசையில் அண்ணா பல்கலை. இடம்பெற செயல் திட்டம்

உலக அளவிலான க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தை இடம் பெறச் செய்யும் வகையில் புதிய செயல் திட்டம் வகுக்கப்படவுள்ளது என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டம்: காவல் ஆணையா் தொடங்கி வைத்தாா்

கோடைக்காலம் தொடங்கியதையொட்டி, போக்குவரத்து போலீஸாருக்கு மோா் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். கோடைக்காலத்தில் போக்குவரத்து போலீஸாரின் தாகத்த... மேலும் பார்க்க

மாா்ச் 24, 25-இல் தேசிய அளவிலான வேலைநிறுத்தம்: வங்கி ஊழியா் சங்கங்கள்

வங்கி ஊழியா்களின் முக்கியக் கோரிக்கைகள் தொடா்பாக இந்திய வங்கிகள் சங்கத்துடன் (ஐபிஏ) மேற்கொள்ளப்பட்ட பேச்சுவாா்த்தை தோல்வியைத் தொடா்ந்து வரும் 24, 25-ஆம் தேதிகளில் இரு நாள் தேசிய அளவிலான வேலைநிறுத்தத்த... மேலும் பார்க்க