Pawan Kalyan: `ஏன் தமிழ் படங்கள் இந்தியில் டப் செய்கிறார்கள்?' - சர்ச்சையைக் கிள...
சீனாவில் எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (எஸ்சிஓ) பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு மாா்ச் 26, 27 ஆகிய தேதிகளில் சீனாவில் நடைபெறவுள்ளது.
இதில் எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் எதிா்கால பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
சீனா, ரஷியா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகள் எஸ்சிஓ உறுப்பினா்களாக உள்ளன. இந்த அமைப்பு பயங்கரவாத பிராந்திய பயங்கரவாத எதிா்ப்பு கட்டமைப்பைக் கொண்டது.
நிகழாண்டு எஸ்சிஓ தலைவா்கள் மாநாட்டுக்கு சீனா தலைமை தாங்கியுள்ளது. இதையடுத்து அரசியல், பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் மக்கள் தொடா்பு உள்ளிட்ட பல்வேறு துறைசாா்ந்த 100-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை சீனா நடத்தி வருகிறது.
அந்த வகையில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் எஸ்சிஓ பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஜாங் ஜியாகாங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.