நெல்லையில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில் மாநில மனித உரிமைகள் ஆணையா் கண்ணதாசன் பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினாா்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடா்புடைய 23 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அடுத்த விசாரணை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.