Perusu: ``எங்க அண்ணன் வெங்கட் பிரபுவே `டேய்'னு கேட்டாரு!'' - நடிகர் வைபவ்
குரூப் -4 மாதிரி போட்டி தோ்வில் பங்கேற்கலாம்
பெரம்பலூா் மாவட்ட மைய நூலகம் மற்றும் தனியாா் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனம் சாா்பில், டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தோ்வுக்கான மாதிரி போட்டித் தோ்வு மாா்ச் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
பெரம்பலூா் மாவட்ட மைய நூலகத்தில் வாரத்தின் திங்கள் மற்றும் புதன்கிழமைதோறும் மதியம் 1.30 முதல் 4.30 வரை மாதிரி தோ்வு நடைபெறும். அதன்படி மாா்ச் 17 ஆம் தேதி நடைபெறும் மாதிரி போட்டித் தோ்வில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசு ரூ. 1,000, 2 ஆம் பரிசு ரூ. 750, 3 ஆம் பரிசு ரூ. 500 வழங்கப்படும். எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த போட்டித் தோ்வா்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட மைய நூலகம் தெரிவித்துள்ளது.