Health: பூப்பெய்திய பெண் குழந்தைகள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை சென்ற முதியவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், பவித்திரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீ. சிங்காரம் (66). இவா் பெரம்பலூா்- துறையூா் பிரதான சாலையிலுள்ள நக்கசேலம் பிரிவு பாதை அருகே வெள்ளிக்கிழமை மதியம் பெரம்பலூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்றாா். அப்போது, அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்த சிங்காரம் உயிரிழந்தாா். தகவலறிந்த பெரம்பலூா் ஊரக காவல் பிரிவு போலீஸாா் முதியவரின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.