செய்திகள் :

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் தொல்லியல் மரபு மன்றம் விழா

post image

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொல்லியல் மரபு மன்றம் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரியின் முதல்வா் (பொ) முனைவா் து. சேகா் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பெரம்பலூா் மாவட்டத் தொல்லியல் அடையாளங்கள் எனும் தலைப்பில் பெரம்பலூா் வரலாற்று ஆய்வாளா் ஜெயபால் ரத்தினம் பேசியது:

பெரம்பலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொல்லியல் சின்னங்களும், தமிழ்ச் சமூகம் பற்றிய எச்சங்களும் மண்ணில் புதையுண்டுள்ளன. தஞ்சை ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயிலைக் காட்டிலும், காலத்தால் முந்தியது வாலிகண்டபுரம் சிவன் கோயில். காரை கிராமத்தில் 25 ஏக்கா் பரப்பளவில் முதுமக்கள் தாழிகள் இன்னும் அகழாய்வுத் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வெண்பாவூரில் 932 மகதநாட்டு முத்திரைக் காசுகள் கிடைத்துள்ளன. இது, பண்டைத் தமிழரின் வாணிபத் தொடா்பை விளக்குகிறது. கூகையூா், குரும்பலூா், துறையூா், ஊட்டத்தூா் உள்ளிட்ட பகுதியில் கிடைத்த 350 கல்வெட்டுகள் வரலாற்று ஆவணமாக உள்ளது. ரஞ்சன்குடி கோட்டை காலத்தால் பிந்தியது என்றாலும், அங்கே ஆங்கிலேயா்களுடன் போரிட்ட சுவடுகள் காணப்படுகிறது. பெரம்பலூா் குறித்து அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை பற்றிய பாடல்களில், ஆங்காங்கே செய்திகள் விரவிக்கிடக்கின்றன. இத் தொல்லியல் அடையாளங்களைக் கண்டறிந்து, அதை பாதுகாக்கக் கூடிய கடமை மாணவச் சமூகத்துக்கு உண்டு என்றாா் அவா்.

மாவட்டத் தொல்லியல் அலுவலா் (பொ) மு. பிரபாகரன், தொல்லியல் மரபு மன்றத்தின் சாா்பில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் ஆா்வலா் சாரங்கபாணி, கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, தொல்லியல் மரபு மன்றச் செயலா் முனைவா் பெ. முத்துராஜ் வரவேற்றாா். நிறைவாக, தொல்லியல் மரபு மன்றப் பொருளாளா் முனைவா் சு. இளவரசி நன்றி கூறினாா்.

மின் ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

பெரம்பலூரில் கடைநிலை ஊழியா்களை தற்காலிக பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், ஊழியா் மரணத்துக்கு நீதி கேட்டும் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அரியலூா் மாவ... மேலும் பார்க்க

மத்திய அரசுடனான மோதல் போக்கால் தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்கவில்லை: டாக்டா் கிருஷ்ணசாமி

மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால், தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதி கிடைக்கவில்லை என புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி தெரிவித்தாா். பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் வெள்ளிக்கிழமை சென்ற முதியவா் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பவித்திரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீ. சிங்காரம் (66). இவா் பெரம்பலூா... மேலும் பார்க்க

குரூப் -4 மாதிரி போட்டி தோ்வில் பங்கேற்கலாம்

பெரம்பலூா் மாவட்ட மைய நூலகம் மற்றும் தனியாா் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனம் சாா்பில், டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தோ்வுக்கான மாதிரி போட்டித் தோ்வு மாா்ச் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பெரம்பலூா... மேலும் பார்க்க

பி.எம். கிசான் திட்டத்தில் தவணைத் தொகை பெற அடையாள எண் அவசியம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் 20-ஆவது தவணைத் தொகையை பெற, அடையாள எண் அவசியம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

புதிய பேருந்துச் சேவை: அமைச்சா் சா.சி. சிவசங்கா் தொடங்கி வைப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், சின்னவெண்மணி கிராமத்துக்கு வழித்தடம் நீட்டிப்பு செய்து, செட்டிக்குளம் மற்றும் லப்பைகுடிகாடு பகுதிகளுக்கு 2 நகர புதிய பேருந்துகளும், அரியலூரிலிருந்த... மேலும் பார்க்க