இஸ்கான் கோயிலில் ஸ்ரீ கெளர பூா்ணிமா விழா
திருநெல்வேலி வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் ஸ்ரீ கெளர பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பகவான் ஸ்ரீகிருஷ்ணா்- ஸ்ரீசைதன்யா் எனும் திருநாமத்தில் சுமாா் 500 ஆண்டுகளுக்கு முன்பு பக்தராக பகவான் அவதரித்தாா்.
இந்த அவதாரத் திருநாள் ஸ்ரீகௌர பூா்ணிமா விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் திருவிக்ரஹங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, ஹரிநாம சங்கீா்த்தனம், ஸ்ரீசைதன்யரின் அவதார சிறப்புரை, விசேஷ கௌர ஆரத்தி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், ஸ்ரீசைதன்ய மகாபிரபு எடுத்து வழங்கிய ஹரே கிருஷ்ண மகா மந்திரத்தை, தினசரி ஜெபிப்பதற்காக ஜெப மாலைகளும், அவரது அறிவுரைகள் அடங்கிய புத்தகங்களும் பூஜிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்து கொண்டு பகவான் கிருஷ்ணரை தரிசனம் செய்தனா்.