Coolie : `சிக்கிடு வைப்!' - `கூலி' திரைப்படத்தின் BTS புகைப்படங்கள்! | Photo Alb...
நமக்கு நாமே திட்டம்: பங்களிப்புத் தொகை செலுத்த விரும்புவோா் தெரிவிக்கலாம்
அரியலூா் மாவட்டத்திலுள்ள ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் நமக்கு நாமே திட்ட பணிகளுக்கு பொதுமக்களின் பங்குத் தொகை வரவேற்கப்படுகிறது என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: அரியலூா், செந்துறை, திருமானூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் தா.பழூா் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊரகப் பகுதிகளில் பொது மக்கள் பங்களிப்புடன் கூடிய நமக்கு நாமே திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது.
பணிகள் குறித்த விவரங்கள் மற்றும் பணிகளுக்கான பொதுமக்கள் பங்குத் தொகை வரவேற்கப்படுகிறது. இதில் பொதுப் பிரிவினா் வசிக்கும் பகுதிகளில், பணிகளின் மதிப்பீடு தொகையில் மூன்றில் ஒரு பங்கு குறையாமல் பொதுமக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.
பட்டியல் இனத்தவா், பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில், பொதுமக்கள் பங்களிப்பானது, பணிகளின் மதிப்பீடு தொகையில் ஐந்தில் ஒரு பங்கு குறையாமல் இருக்க வேண்டும். பணிகள் ஊரகப் பகுதிகளில் மட்டும் செயல்படுத்தப்படும்.
மேற்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு பொதுமக்கள் பங்குத்தொகை செலுத்திட விரும்பினால், ஆட்சியரகம், முதல் தளத்திலுள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.