Coolie : `சிக்கிடு வைப்!' - `கூலி' திரைப்படத்தின் BTS புகைப்படங்கள்! | Photo Alb...
பள்ளி வேன் விபத்து ஆசிரியா் உள்பட 11 குழந்தைகள் காயம்
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சென்ற பள்ளி வேன், சுங்கச்சாவடி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியா் உள்பட 11 குழந்தைகள் காயமடைந்தனா்.
உடையாா்பாளையம் அருகே தனியாா் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று, வெள்ளிக்கிழமை பள்ளிக் குழந்தைகள் 30 பேரை ஏற்றிக் கொண்டு, திருச்சிக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டது. வேனை தா. பழூரைச் சோ்ந்த சூா்யா (38) என்பவா் ஓட்டி வந்தாா்.
மணகெதி சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இதையறிந்த அப்பகுதியினா் விரைந்துச் சென்று காயமடைந்த ஆசிரியா் முருகானந்தம், வேன் உதவியாளா் சரளா (36), பள்ளி குழந்தைகள் ரக்ஷன்(10), அனன்யா(11), வைஷ்ணுதேவி(11), புனிதா(11), திருப்பதி(10) உள்ளிட்ட 11 பேரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று அனைவரும் வீடு திரும்பினா். இதுகுறித்து உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.