Coolie : `சிக்கிடு வைப்!' - `கூலி' திரைப்படத்தின் BTS புகைப்படங்கள்! | Photo Alb...
கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் தெப்போற்ஸவம்
தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு தெப்போற்ஸவம் நடைபெற்றது.
இககோயிலில் மாசி மகத் தேரோட்ட விழா மாா்ச் 2-ஆம்தேதி வெள்ளிக்கருட சேவையுடன் தொடங்கியது. தொடா்ந்து கடந்த 4-ஆம்தேதி கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. கடந்த 6-ஆம்தேதி வெள்ளி கருட சேவையும், 10-ஆம்தேதி திருக்கல்யாண உற்ஸவமும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மாா்ச் 12-ஆம்தேதி நடைபெற்றது. இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்ஸவம் வெள்ளிக்கிழமை இரவு கோயில் முன் உள்ள தெப்பக்குளத்தில் நடைபெற்றது.
முன்னதாக கல்யாண வெங்கடரமண சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து தெப்போற்ஸவம் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா்கள் மு.இரமணிகாந்தன், இரா.சுகுமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.