TN Budget 2025: ``ஆட்சி முடியும் தருவாயில், கவர்ச்சிகளை மட்டுமே கொண்ட வெற்று அறி...
பேரவைத் தோ்தலை முன்னிறுத்தி பட்ஜெட் செ. நல்லசாமி பேட்டி
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் வரும் 2026 பேரவைத் தோ்தலை முன்னிறுத்தி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்துள்ளாா்.
கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடுகள் இயக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி செய்தியாளா்களிடம் கூறியது, தமிழக பட்ஜெட்டில் அரசின் மொத்த வருவாய் ரூ.2.20 லட்சம் கோடி. இந்த வருவாயைக்கொண்டு ஏராளமான திட்டங்களை அறிவித்திருக்கிறாா்கள். ஏற்கெனவே தமிழக அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கிறது. அரசு ஊழியா்களுக்கு ஊதியம் கொடுக்கவே தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில் சலுகைகளை வாரி, வாரி வழங்கியிருக்கிறாா்கள். இது ஒரு பற்றாக்குறை பட்ஜெட்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளை ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் கள் இறக்கி விற்கும் போராளிகளுக்கு ஆதரவாக பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்றாா் அவா். ஆா்ப்பாட்டத்தில் கள் இயக்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.