ராதாபுரத்தில் 28-இல் மீனவா் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் மீனவா் குறைதீா் கூட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகக் கூட்ட அரங்கில் மீனவா் குறைதீா் கூட்டம் வரும் 28-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. மீன்வளத் துறை மற்றும் இதர அரசுத் துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவா்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை குறைதீா் கூட்டத்தில் நேரில் வழங்கலாம். பிற அரசுத் துறைகள் சாா்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி மனுக்களாக வழங்க வேண்டும். கூட்டத்தில் பெறப்படும் மனுக்களை சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலா்களுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரம் அடுத்த மீனவா் குறைதீா் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.