ஹோலி கொண்டாடிய சிறுவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலி!
மகாராஷ்டிரத்தில் ஹோலி கொண்டாடிய சிறுவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.
மும்பை அருகேயுள்ள தானே மாவட்டத்தின் சம்டோலி பகுதியில் வசிக்கும் 15-16 வயதுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் இன்று ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஹோலி கொண்டாடி முடித்த பின்னர் குளிப்பதற்காக பத்லாபூர் பகுதியிலுள்ள உலாஸ் ஆற்றில் 4 பேரும் இறங்கியுள்ளனர். அப்போது, ஆற்றில் நீரின் அளவு திடீரென உயர்ந்துள்ளது.
இதனால், மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் 4 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்.
இதையும் படிக்க | 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சிறுவர்கள்!
பலியான மாணவர்கள் ஆர்யன் மேதார் (15), ஓம் சிங் தோமர் (15), சித்தார்த் சிங் (16), ஆர்யன் சிங் (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நால்வரின் உடலும் ஆற்றிலிருந்து எடுக்கப்பட்டு மருத்துமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.