செய்திகள் :

மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து 3 இ-ரிக்‌ஷாக்கள் மீது மோதிய கார்: 7 பேர் பலி

post image

மேற்கு வங்கத்தில் வேகமாக வந்த கார் அடுத்தடுத்து 3 இ-ரிக்‌ஷாக்கள் மீது மோதியதில் 7 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் வேகமாக வந்த கார் மூன்று இ-ரிக்‌ஷாக்கள் மீது ஒன்றன் பின் ஒன்றாக வெள்ளிக்கிழமை மோதியது. இந்த விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட ஏழு பேர் பலியானார்கள்.

எட்டு பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல் அதிகாரி கூறுகையில், எதிர் பக்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு எஸ்யூவி கார் மூன்று இ-ரிக்‌ஷாக்கள் மீது அடுத்தடுத்து மோதியதில், மின்சார வாகனங்களில் இருந்த ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு!

மேலும் எட்டு பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்தை ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற காரின் ஓட்டுநரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு - காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்

ஜம்மு - காஷ்மீரின் பந்திபோராவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 10 கிலோமீ... மேலும் பார்க்க

ரயில் கடத்தல் விவகாரம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி!

பலூசிஸ்தான் ரயில் கடத்தல் சம்பவத்தில் இந்தியா பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா பதிலடி வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் ... மேலும் பார்க்க

பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக்கொலை!

பஞ்சாபில் சிவசேனை கட்சித் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாபின் மோகா மாவட்டத்தின் சிவசேனை கட்சித் தலைவர் மங்கத் ராய் என்ற மங்கா மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் துப்... மேலும் பார்க்க

காகித, அட்டை இறக்குமதி 10% அதிகரிப்பு

கடந்த ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 20அதிகரித்துள்ளது.இது குறித்து இந்திய காகித உற்பத்தியாளா்கள் சங்கம் (ஐபிஎம்ஏ) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெர... மேலும் பார்க்க

தேஜஸ் போா் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, மற்றொரு உள்நாட்டு தயாரிப்பானதேஜஸ் இலகு ரக போா் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. வானில் இருந்து 100 கி.மீ. தொலைவுக்கு மேல் பாய்ந்து வானில் ... மேலும் பார்க்க

ம.பி.: நிறுவிய இரு நாள்களில் அம்பேத்கா் சிலை மாயம் காவல் துறை வழக்குப் பதிவு

மத்திய பிரதேசத்தின் சத்தா்பூா் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நிறுவப்பட்ட அம்பேத்கா் சிலை இரு நாள்களில் மாயமானது. அதனை எடுத்துச் சென்றது யாா் என்பது தெரியாத நிலையில், காவல் துறையினா் வழக்குப் பதிவு செய... மேலும் பார்க்க