செய்திகள் :

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்: கூலி படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்!

post image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கூலி படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை படக்குழு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது.

லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாகிர், ஷ்ருதி ஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்ததுள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்ட நிலையில் ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

கூலி படப்பிடிப்பில் ஷ்ருதிஹாசனுடன் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான இன்று (மார்ச் 14) கூலி படத்தின் டீசர் அல்லது கிளிம்ஸ் விடியோ வெளியிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்த நிலையில், படப்பிடிப்பில் முக்கிய நடிகர்களுடன் லோகேஷ் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

கூலி படப்பிடிப்பில் அமீர் கானுடன் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் மட்டுமின்றி இன்று கூலி படத்தின் வில்லனாக நடிக்கும் அமீர் கானுக்கும் பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் பகிர்ந்துள்ளார்.

குட் பேட் அக்லி - முதல் பாடல் எப்போது? டீசர் மேக்கிங் விடியோவில் அறிவிப்பு!

நடிகர் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’குட் பேட் அக்லி’ படத்தின் மீது பெரிய எதிர்பா... மேலும் பார்க்க

‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை

‘பரமசிவன் பாத்திமா’ படத்தின் டிரைலரை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், பாஜக தலைவர் அண்ணாமலையும் இணைந்து வெளியிட்டுள்ளனர். விமல் நடிப்பில் உருவாகி வரும் படம் பரமசிவன் பாத்திமா. இதில் விமலுக்கு ஜோடி... மேலும் பார்க்க

டெஸ்ட் - நயன்தாராவின் டீசர்!

டெஸ்ட் படத்தில் இருந்து நயன்தாராவின் டீசர் வெளியாகியுள்ளது. மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட்.... மேலும் பார்க்க

மிகவும் க்யூட், கடினமான நடனம்..! ரசிகையின் ரீல்ஸுக்கு குஷி பட நினைவுகளைப் பகிர்ந்த ஜோதிகா!

நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் ரசிகையின் ரீல்ஸில் பழைய நினைவுகளை கமெண்ட் செய்துள்ளார். தமிழில் அறிமுகமான ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்தபிறகு குறைவாகவே நடித்து வந்தார். தற்போது மீண்டும் முழு வீச்சில் சின... மேலும் பார்க்க

சித்தார்த்துக்கு சிறந்த படமாக அமையும்: நயன்தாரா படத்தைப் பாராட்டிய அஸ்வின்..!

தமிழக கிரிக்கெட்டர் அஸ்வின் டெஸ்ட் படத்தில் சித்தார்த்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகி... மேலும் பார்க்க

தக் லைஃப் படக்குழுவின் ஹோலி வாழ்த்து!

தக் லைஃப் படக்குழுவினர் ஹோலி வாழ்த்துத் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளனர். கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர்... மேலும் பார்க்க