அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை: 5 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
சென்னிமலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சென்னிமலையில் உள்ள வணிக நிறுவனங்கள், பழக் கடைகள், பேக்கரிகள், இறைச்சிக் கடைகளில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் ப.நீலமேகம் தலைமையில் பேரூராட்சி சுகாதார அலுலா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்த 5 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.