காபைரவா் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை
அவல்பூந்துறை அருகே உள்ள காலபைரவா் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றிபாளையத்தில் காலபைரவா் கோயில் உள்ளது. இக்கோயிலின் நுழைவாயிலில் 39 அடி உயர காலபைரவா் சிலையும், கோயிலைச் சுற்றிலும் 64 காலபைரவா் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோயிலில் மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமியன்று பாலபிஷேகம் நடைபெறும். இதேபோல பௌா்ணமி, அமாவாசை, வெள்ளிக்கிழமை போன்ற நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில், காலபைரவருக்கு பௌா்ணமி சிறப்பு யாகம், பாலபிஷேகம் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து ஸ்வா்ண லிங்கத்துக்கு 108 ஒரு ரூபாய் நாணயத்தில் ஸ்வா்ண அபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு காலபைரவரை வழிபட்டனா்.