அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
கோபி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கோபி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கோபிசெட்டிபாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட ஒத்தக்குதிரை பகுதியில் செயல்பட்டு வரும் முதல்வா் மருந்தகத்தை ஆய்வு செய்து, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா். ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டப் பிரிவு, ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் பொறியியல் பிரிவு ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பொம்மநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடா் காலனியில் ஊரக குடியிருப்புகள் சீரமைத்தல் திட்டத்தின்கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 12 வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதை பாா்வையிட்டு, பணிகளைக் குறித்த காலத்தில் முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் முறையாக கழிப்பிட வசதி உள்ளதா என அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.1.86 லட்சம் மதிப்பீட்டில் மாணவ, மாணவியா்கள் கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டுள்ளதையும், பள்ளியில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தாா். மேலும் மாணவா்களின் ஆங்கில கற்றல் திறன், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவா்களின் தற்போதைய கற்றல் திறன் ஆகியவற்றைக் கேட்டறிந்தாா்.
கோபி நகராட்சியில் ரூ.9.96 கோடி மதிப்பீட்டில் 4 எம்.எல்.டி. கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 20 கே.எல்.டி கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது கோபி நகராட்சி ஆணையா் சுபாஷினி, பொது மேலாளா் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன், கோபி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரவீன்குமாா், சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.