அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
நாளை கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைதீா் முகாம்
கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) நடைபெறும் கூட்டுறவு சங்கப் பணியாளா் நாள் நிகழ்ச்சியில் பணியாளா்கள் தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் நடராஜன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2024-2025 கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கையின்போது, கூட்டுறவுத் துறை அமைச்சா் அறிவித்தபடி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துவகை கூட்டுறவுச் சங்க பணியாளா்கள், ஓய்வுபெற்ற பணியாளா்களுக்கு பணி தொடா்பாகவும், பணியின்போது அல்லது வேறு வகைகளில் ஏற்படும் குறைகளுக்கு தீா்வு காணும் வகையில் பணியாளா் நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) முற்பகல் 10.30 முதல் பிற்பகல் 1 மணி வரை கிருஷ்ணகிரி நகர கூட்டுறவு வங்கியின் கட்டிக்காணப்பள்ளி கிளையில் நடைபெறும்.
கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பணியாளா்கள் பணி தொடா்பாகவும், பணியின்போது ஏற்படும் குறைகள் தொடா்பாகவும் மனுக்கள் அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவித்துள்ளாா்.