லோகேஷ் கனகராஜ் பிறந்தாள்: கூலி தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட விடியோ!
காகித, அட்டை இறக்குமதி 10% அதிகரிப்பு
கடந்த ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 20அதிகரித்துள்ளது.
இது குறித்து இந்திய காகித உற்பத்தியாளா்கள் சங்கம் (ஐபிஎம்ஏ) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 17.6 லட்சம் டன்னாக உள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகம்.
மதிப்பின் அடிப்படையில் நாட்டின் காகித, அட்டை இறக்குமதி நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ரூ.11,196 கோடியாக உள்ளது.
இந்த காலகட்டத்தில் இறக்குமதி 10,000 கோடியைக் கடந்துள்ளது இதுவே முதல்முறை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.