மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து 3 இ-ரிக்ஷாக்கள் மீது மோதிய கார்: 7 பேர் பலி
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணித்த செங்கோட்டையன்!
சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கும்முன் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட்டது. நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.
பட்ஜெட் உரை தொடங்கும்போது, தமிழக அரசின் டாஸ்மாக் ஊழல் குறித்து கோஷமிட்டு அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பின்னர் அவை வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக பேரவை நிகழ்வுகள் தொடங்கும்முன் சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது அறையில் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்.பி. உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும், எம்எல்ஏக்களும் கலந்துகொண்டனர்.
இதில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை என தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க | பட்ஜெட்: அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள்! 40,000 பணியிடங்கள் நிரப்பப்படும்!
அத்திக்கடவு - அவினாசி திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் இடம்பெறவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்காதது அரசியலில் மேலும் சலசலப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.