Robber movie public review | Metro Sathya, Daniel Annie Pope, Deepa Shankar | SM...
Infosys: `எதர்கெடுத்தாலும் 'AI' என்று பேசுகிறார்கள்; அது ஒரு சாதராண தொழில்நுட்பம்' - நாராயண மூர்த்தி
சில மாதங்களுக்கு முன்னர் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி ஊழியர்கள் அனைவரும் வாரத்துக்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். அதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்துத் தற்போது செயற்கை நுண்ணறிவால் பெரிதாக வேலைகள் பறிபோகும் ஆபத்தில்லை என்று பேசியிருக்கிறார்.

சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இது குறித்துப் பேசியிருக்கும் நாராயண மூர்த்தி, "இப்போதெல்லாம் இந்தியாவில் எதற்கெடுத்தாலும் AI பற்றி பேசுவது ஃபேஷனாகிவிட்டது. அது ஒரு ப்ரோகிராம் செய்யப்பட்ட சாதரண தொழில்நுட்பம்தான்.
மெஷின் லேர்னிங் மற்றும் நிறைய தரவுகளை அதில் செலுத்துவதால் அது திறன் மிகுந்ததாக வேலை செய்கிறது. இருப்பினும் அது பழைய புரோகிராம்களையே வடிவமைக்கிறது. மேற்பார்வையின்றி செயல்படுவதால் அதை நாம் முழுமையாக நம்பியிருக்க முடியாது. அதை நாம் திறன் மிகுந்த வேலைகள் செய்யப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
VIDEO | Speaking at the Tiecon Mumbai 2025 event on Wednesday, Infosys Co-Founder NR Narayana Murthy said, "I have seen several normal ordinary programmes touted as AI. There are two fundamental principles in AI, one machine learning which is nothing but a large scale… pic.twitter.com/rHjtcWZmSw
— Press Trust of India (@PTI_News) March 13, 2025
AI சில வேலைகளுக்கு மாற்றாக இருக்கும், அதனால் வேலைகள் போக வாய்ப்பிருக்கிறது. ஆனால், அது மாறுதல் கொண்டது. அதை நாம் ஒரு உதவியாளர் போல பயன்படுத்திக் கொண்டால் பிரச்னைகள் இல்லை" என்று பேசியிருக்கிறார்.