Skype: 'இனி ஸ்கைப் கிடையாது... 'இது' தான்!' - மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு
Skype
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது வீடியோ கான்பரன்சிங் தளமான ஸ்கைப்(Skype) தள சேவைகளை வரும் மே மாதத்தில் நிரந்தரமாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த செயலிக்கு மாற்றாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.
ஸ்கைப் செயலி 2003 ஆம் ஆண்டு நிக்லாஸ் ஜென்ஸ்ட்ராம் என்னும் டெவலப்ரால் முதன் முதலில் வெளியிடப்பட்டது. வீடியோ வழி உரையாடல்கள், வீடியோ கான்ஃபரன்சிங் மற்றும் வாய்ஸ் கால்ஸ் போன்ற வசதிகள் இந்த செயலியில் கொண்டு வரப்பட்டது. மேலும் கூடுதல் வசதிகளாக பயனர்கள் ஸ்கைப் தளத்திலேயே இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஃபைல் டிரான்ஸ்பர் உள்ளிட்ட அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் புது புது அப்டேட்கள் கொண்டு வரப்பட்டன.
இதனால் பெரிய பெரிய ஐடி நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்கள் உடனான வீடியோ கான்ஃபரன்சிங் மீட்டிங்கிற்கு ஸ்கைப் தளத்தையே பயன்படுத்தியது. கணினி மற்றும் மொபைல் போன்களிலும் ஸ்கைப்பை பயன்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்டதால் 2005 ஆம் ஆண்டில் ஸ்கைப் பையனர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை எட்டியது.

2011 ஆம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்பை $8.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. அதன் பிறகு மைக்ரோசாப்ட் தனது சேவைகளுடன் ஸ்கைப் தளத்தின் சேவைகளையும் சேர்த்து வழங்கியது. கோவிட்-19 காலக்கட்டத்தில் ஜூம் செயலி வளர்ச்சி அடைய தொடங்கியது. வீடியோ கான்கிரசிங் மற்றும் ஆன்லைன் மீட்டிங் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு ஜூம் செயலியை பயனர்கள் பயன்படுத்த தொடங்கினர். ஜூம் செயலி மற்றும் கூகுள் மீட் உள்ளிட்ட செயலிகளை பயனர்கள் பெரிதும் பயன்படுத்த தொடங்கியதால் ஸ்கைப் தளத்திற்கான பயனர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் தளத்தின் சேவைகளை வரும் மே 5 ஆம் தேதி முதல் நிரந்தரமாக மூட உள்ளதாக அறிவித்துள்ளது. ஸ்கைப் பயனர்கள் மே 5-ம் தேதி வரையில் அந்த தளத்தை பயன்படுத்தலாம் என்றும் அதன் பிறகு டீம்ஸ் செயலியை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்து உள்ளது. ஸ்கைப் பயனர்கள் தங்களது பயனர் விவரங்களை கொண்டே டீம்ஸ் செயலியில் லாகின் செய்து கொள்ளலாம் என்றும், பழைய சாட்கள் மற்றும் கான்டக்ட்ஸ் போன்றவை அப்படியே இருக்கும் என்றும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
ஸ்கைப் குறித்த உங்களின் நினைவுகளை கமெண்ட்டில் தெரிவியுங்கள் மக்களே..!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
