போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 290 பேர் கைது, 232 வழக்குகள் பதிவு!
சீமான் மேல்முறையீட்டு மனு; திங்கள்கிழமை விசாரணை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்கிறது.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011-ஆம் ஆண்டு காவல் துறையில் புகாா் அளித்திருந்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 376- ஆவது பிரிவின்படி வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடா்பாக விசாரணை செய்து 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வளசரவாக்கம் போலீஸாருக்கு கடந்த 21-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு தொடர்பாக காவல் துறை 2 முறை சம்மன் அனுப்பிய நிலையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அவர் நேற்று ஆஜரானார்.
உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 50 பேர் மீட்பு: 4 பேர் பலி!
இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை அண்மையில் தாக்கல் செய்தார். மனுவில், 12 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.