போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 290 பேர் கைது, 232 வழக்குகள் பதிவு!
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு ஜாமீன் !
அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் சீமான் உதவியாளர் அமல்ராஜ், சுபாகருக்கு சோழிங்கநல்லூர் நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியுள்ளது.
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அமல்ராஜ் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு வழக்கில் சோழிங்கநல்லூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது.
இருப்பினும், ஆயுதங்கள் வைத்திருந்ததாக தொடர்ந்த வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிலுவையில் இருப்பதால் சனிக்கிழமை சிறையில் இருந்து விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இலங்கை முன்னாள் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், சீமான் வீட்டு பணியாளர் சுபாகர் மற்றும் வீட்டுக் காவலாளி அமல்ராஜ் ஆகியோருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, சம்மனை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், போலீஸாரை தாக்கியதாகவும் இரு வெவ்வேறு வழக்குகள் பதியப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.