மே 17 இயக்கத்தின் 2025-ம் ஆண்டுக்கான தமிழ் தேசியப் பெருவிழா!
மே பதினேழு இயக்கம் 2025-ம் ஆண்டுக்கான தமிழ் தேசியப் பெருவிழாவை நடத்தவிருக்கிறது. மார்ச் 15, 16 என இரண்டு நாட்களுக்கு இந்த பெருவிழா நடைபெறவிருக்கிறது. இந்த விழாவின் அறிஞர் அவையம் நிகழ்வு மார்ச் 15 (சனிக்கிழமை ) மற்றும் 16-ம் (ஞாயிற்றுக்கிழமை) தேதிகளில் சென்னை சைதாப்பேட்டையிலுள்ள வி.கே.என் மஹாலில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வு காலை 9 மணி முதல் நடைபெறவிருக்கிறது. மேலும், காந்தள் கலை விழா மார்ச் 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சைதாப்பேட்டையிலுள்ள காரணீஸ்வரர் கோவில் தேரடியில் நடக்கவிருக்கிறது. அறிஞர் அவையம் நிகழ்வு மொத்தமாக இரண்டு நாட்களில் நான்கு அமர்வுகளாக நடைபெறவிருக்கிறது.

இதனை தாண்டி ஞாயிற்றுக்கிழமை காரணீஸ்வரர் கோவில் தேரடியில்... தமிழின ஆளுமைகளுக்குச் சிறப்புச் செய்யும் வகையில் விருது விழாவும் நடைபெறவிருக்கிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் த. வெள்ளையன், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாஸ்கர், தியாகி இமானுவேல் பேரவையின் தலைவர் பூ சந்திரபோஸ் ஆகியோருக்கு அருந்திறல் தமிழர் விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது) அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், த.செயராமன், ஹென்றி டிபென், பிரின்ஸ் கஜேந்திர பாபு, அ.சி. சின்னப்ப தமிழர், ஜெயராணி ஆகியோருக்கு தமிழ் கனலி விருது வழங்கப்படவிருக்கிறது.