Starlink: இந்தியாவில் என்ட்ரியாகும் எலான் மஸ்க் நிறுவனம்... அம்பானியின் ஜியோவிற்கு ஆபத்தா?!
கடந்த ஆண்டிலிருந்து எலான் மஸ்க்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் இந்திய தொலைதொடர்பு துறைக்குள் வர கடுமையாக முயற்சி செய்து வந்தது.
கடந்த ஆண்டு, செயற்கைக்கோள் இணைய சேவை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து பேச்சு வந்தப்போது இந்திய தொலைதொடர்பு துறையில் டாப் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியோ, அந்த ஸ்பெக்ட்ரத்தை ஏலமாக விட வேண்டும் என்று கேட்டார். ஆனால், எலான் மஸ்க், 'அது தவறான முறை... உலகம் முழுவதும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தான் செய்யப்படுகிறது' என்று வாதாடினார்.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா 'ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் விடப்படாது. ஒதுக்கீடு தான் செய்யப்படும்' என்று அறிவித்தார். தற்போது யாருக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது பரிசீலனையில் உள்ளது.

இந்த நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனமும், ஸ்டார்லிங் நிறுவனமும் இந்தியாவில் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க கைக்கோர்த்துள்ளது. இதுக்குறித்து ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
'இந்தியாவில் முதன்முறையாக ஸ்டார்லிங் சேவையை இங்கே வழங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம் ஸ்டார்லிங் நிறுவனத்தின் உபகரணங்களை இந்தியாவில் உள்ள ஏர்டெல் ஸ்டோர்களில் பெற முடியும். இதன்மூலம் பள்ளிக்கூடம், மருத்துவமனைகள், கிராமங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் சிறந்த இணைய சேவையை வழங்கமுடியும்" என்று பாரதி ஏர்டெல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை தலைவர் கோபால் விட்டல் கூறியுள்ளார்.
ஸ்டார்லிங்க் என்பது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணைய மண்டலம் ஆகும். இதன் மூலம் உலகின் மூலை முடுக்கில் கூட தடையின்றி, ஸ்பீடான இன்டர்நெட்டை வழங்க முடியும். ஏர்டெல் ஸ்டோர்களில் கிடைக்கும் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வாங்கி பள்ளிக்கூடம், நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் பயன்படுத்தும்போது, அவர்களுக்கு அந்த உபகரணங்கள் மூலம் அதிவேக மற்றும் தங்கு தடையில்லாத இன்டர்நெட் வசதி கிடைக்கும்.
ஏற்கெனவே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அம்பானிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ஸ்டார்லிங்க் நிறுவனம், மீண்டும் இந்த விஷயத்திலும் அம்பானியின் போட்டியாளருடன் இணைந்துள்ளது.

இந்தியா முழுக்க அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவிற்கு கிட்டதட்ட 14 மில்லியன் வயர்ட் வாடிக்கையாளர்களும், சுமார் 500 மில்லியன் மொபைல் இன்டர்நெட் வாடிக்கையாளர்களும் உள்ளனர். ஏர்டெல்லிற்கு கிட்டதட்ட 300 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஸ்டார் லிங்க் நிறுவனத்தோடு ஏர்டெல் நிறுவனம் கைக்கோர்த்துள்ளதால், அதிக வேக சேவைகள் மூலம் ஏர்டெல் நிறுவனம் இன்னும் நிறைய வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுக்க வாய்ப்புள்ளது. இது ஜியோ நிறுவனத்திற்கு ஆபத்தாக முடியலாம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
