மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து 3 இ-ரிக்ஷாக்கள் மீது மோதிய கார்: 7 பேர் பலி
படப்பிடிப்பு அச்சுறுத்தலாக இருப்பினும் திருப்தி: ரன்பீர் கபூர்
நடிகர் ரன்பீர் கபூர் லவ் அன்ட் வார் படத்தின் வேலைகள் அச்சுறுத்தலாக இருப்பினும் திருப்தியாக இருந்ததாகக் கூறியுள்ளார்.
ரன்பீர் கபூர் 2007இல் தனது முதல் படமான சாவாரியாவில் நடித்தார். அதை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தற்போது ’லவ் அன்ட் வார்’ என்ற படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் ஆலியா பட், விக்கி கௌஷல் நடிக்கிறார்கள். இந்தப் படம் அடுத்தாண்டு திரைக்கு வரவிருக்கிறது.
கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 2022இல் வெளியான கங்குபாய் கைதியவாடி படத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஆலியா பட்டிற்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரன்பீர் கபூர் கூறியதாவது:
லவ் அன்ட் வார் அனைத்து நடிகர்களின் கனவுப் படமாக அமையும். ஏனெனில் ஆலியா பட், விக்கி கௌஷல் உடன் நடிப்பதும், மாஸ்டர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிப்பதும் கனவுதான்.
17 ஆண்டுகளுக்கு முன்பு நான் சஞ்சய் லீலா பன்சாலியுடன் வேலை செய்திருக்கிறேன்.
இவ்வளவு கடினமாக உழைக்கும் ஒரு மனிதரை நான் பார்க்கவில்லை. ஒரு கதாபாத்திரத்தை, உணர்ச்சிகளை, இசையை, இந்திய கலாச்சாரத்தை, அதன் மதிப்புகளை இவர் புரிந்துகொண்டதுபோல யாருமில்லை.
அவரது படப்பிடிப்பில் இருந்தால் மிகவும் அழுப்பாகவும் நீண்டுக்கொண்டும் செல்லும். அது சிறிது அச்சுறுத்தலாக இருந்தாலும் ஒரு கலைஞனாக அது திருப்தியை அளிக்கும். ஏனெனில் அவர் கலையை ஊட்டி வளர்க்கிறார். அதனால் நடிகர்களுக்கு நல்லதுதான் என்றார்.