'பட்டிமன்றம் பேசுறதுக்கான தகுதி எனக்கு இல்லேன்னு நம்பினேன்' - பட்டிமன்றம் ராஜா |...
'ஸ்டார்லைனரின் பிரச்னைக்கு யார் காரணம்? மீண்டும் அதில் பயணிப்பீர்களா?' - சுனிதா, புட்ச்சின் பதில்
ஒன்பது மாத விண்வெளி வாசத்திற்கு பிறகு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பி கிட்டதட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. இந்த இருவருடனும் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு நடந்துள்ளது. அதில் கேட்கப்பட்ட சில கேள்விகள் இதோ...
``உங்களுடைய விண்வெளி பயணம் குறித்து மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அதைப் பற்றிய உங்களுடைய கருத்து...”

சுனிதா வில்லியம்ஸ்: ``நாங்கள் இருவரும் இந்த விண்வெளி பயணத்திற்கு புதிய விண்வெளி கப்பலில் சென்றோம். அது மிகுந்த ஆர்வமாக இருந்தது.
அங்கே நாங்கள் எங்கள் பணியில் இருந்தோம். கீழே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது.
நாங்கள் விண்வெளியில் இருந்தப்போது, மக்கள் எங்களை பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை எங்களது குடும்பம் மற்றும் நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்டோம். ஆனால், இந்த அளவுக்கு மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியாது.
அனைத்திற்கும் நன்றி.”
``ஸ்டார்லைனர் பிரச்னைக்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?”
வில்மோர்: ``இந்தக் கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. அதனால், என்னில் இருந்து தொடங்குகிறேன். ஸ்டார்லைனில் ஏற்பட்ட பிரச்னையால் தான் எங்களால் அதில் திரும்ப முடியவில்லை. அந்த விண்கப்பலின் கமெண்டராக நான் சில கேள்விகளை கேட்டிருக்க வேண்டும். ஆனால், நான் கேட்கவில்லை. அப்படி கேட்க வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை.
இந்தப் பிரச்னைக்கு போயிங், நாசா என அனைவரும் தான் காரணம்.
இவர்கள், அவர்கள் என்று குற்றம் சாட்டாமல், இனி இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பேச வேண்டும்.”

``ஸ்டார்லைனில் மீண்டும் செல்ல வேண்டியது இருந்தால், நீங்கள் செல்வீர்களா?”
வில்மோர்: ``கண்டிப்பாக செல்வேன். காரணம், இதில் சந்தித்த பிரச்னைகளை இனி நாங்கள் சரி செய்யப்போகிறோம்.”
சுனிதா வில்லியம்ஸ்: ``அந்த விண்வெளி கப்பல் முழு தகுதி வாய்ந்தது. பிற விண்வெளி கப்பல்களில் இல்லாத தகுதிகள் பல அதில் இருந்தது. அதில் இருக்கும் ஒன்றிரண்டு பிரச்னைகளை மட்டும் சரிசெய்தால் போதும்.”