Parliament ; Assembly : அனல் பறந்த விவாதங்கள்! | விரக்தியில் Annamalai BJP | Imp...
'இஸ்ரோ தலைவர் கூறியதுபோல இஸ்ரோ உடன் பணிபுரிவீர்களா?' - சுனிதா வில்லியம்ஸின் பதில்!
விண்வெளியில் இருந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருடன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட இந்தியா சம்பந்தமான கேள்விகள்...
பூமிக்கு வந்ததும் நீங்கள் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தீர்கள்? என்ன சாப்பிட வேண்டும் என்று நினைத்தீர்கள்?
சுனிதா வில்லியம்ஸ்: எனக்கு முதலில் என் கணவரையும், என் நாய்களையும் கட்டிப்பிடிக்க வேண்டும் என்று இருந்தது.
என்னுடைய அப்பா சைவம். அதனால், வீட்டிற்கு சென்றதும் நான் நல்ல கிரில் சீஸ் சாண்ட்விச் சாப்பிட்டேன்.

இஸ்ரோ தலைவர் உங்களது விண்வெளி அனுபவத்தை இஸ்ரோவில் பயன்படுத்த விருப்பப்படுவதாக கூறியுள்ளார். நீங்கள் இஸ்ரோவிலோ அல்லது இஸ்ரோவில் இணைந்தோ பணி செய்ய வாய்ப்புள்ளதா? சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இந்தியாவை பார்த்த ஸ்பெஷல் நிமிடத்தை பற்றி பகிர முடியுமா?
சுனிதா வில்லியம்ஸ்: இந்தியா ஆச்சர்யமானது. ஒவ்வொரு முறை இந்தியாவை கடக்கும்போதும், இமயமலையுடைய படங்களை புட்ச் எடுத்து வைத்துள்ளார். மீண்டும் என்னுடைய அப்பாவின் நாட்டிற்கு செல்வேன் என்று நம்புகிறேன்.
முடிந்தளவுக்கு என்னுடைய அனுபவத்தை பல மக்களிடம் பகிர்ந்துகொள்வேன். இந்தயா சிறந்த நாடு மற்றும் அருமையான ஜனநாயகம் கொண்ட நாடு.
அந்த நாடு விண்வெளியில் கால் பதிக்க முயன்றுகொண்டிருக்கிறது. அதற்கு உதவ எனக்கும் விருப்பம் தான்.
புட்ச் (சுனிதாவிடம்) : உங்களுடைய குழு நபர்களையும் அந்தப் பயணத்திற்கு அழைத்து செல்வீர்களா?
சுனிதா வில்லியம்ஸ்: கண்டிப்பாக.