இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
Ghibli Art: `எங்களுக்கும் தூக்கம் வேணும்ல' - வேண்டுகோள் விடுத்த ஓபன் ஏ.ஐ-யின் சாம் ஆல்ட்மென்
முன்பிருந்ததைவிட கடந்த சில ஆண்டுகளாக மக்களிடையே அனிமேஷன் படங்கள் மற்றும் சீரிஸ்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஓ.டி.டி தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு உலகத்தின் அத்தனை படைப்புகளும் பார்பதற்கு இலகுவாக கிடைத்துவிடுவதால் மக்களுக்கு அனிமேஷன் படைப்புகள் இன்னும் நெருக்கமாகியிருக்கிறது என்றே சொல்லலாம்.
தற்போதைய சமூக ஊடக யுகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய டிரெண்டுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. அப்படி தற்போதைய டிரெண்ட் கிப்லி ஆர்ட்.
கிப்லி என்பது ஒரு ஜப்பானிய அனிமேஷன் ஸ்டுடியோ. இந்த ஸ்டுடியோ பல அனிமேஷன் திரைப்படங்களையும் தயாரித்திருக்கிறது.
இதனை மையப்படுத்தி தற்போது ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் சாட் ஜி.பி.டி இந்த புதிய டிரெண்டை மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

சாட் ஜி.பி.டி-யில் உங்களிடன் புகைப்படங்களைப் பதிவேற்றி கீழே `Genrate this attached image to ghibli art' என்ற கமென்ட் கொடுத்தால்போதும். அடுத்த சில நிமிடங்களிலேயே நீங்கள் பதிவேற்றிய புகைப்படத்தை கிப்லி அனிமேஷன் வடிவில் இந்த ஏ.ஐ கொடுத்துவிடும்.
இப்படி பலரும் தங்களின் புகைப்படங்களை இந்த அனிமேஷன் ஸ்டைலுக்கு மாற்றி தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
சர்வர்களில் கட்டுக்கடங்காத பயனாளர்கள் ஒரே நேரத்தில் பயன்படுத்தினால் சில சிக்கல்கள் பயன்படுத்துவதில் எழும். அதுபோலதான் நேற்றைய தினம் இந்த சிக்கல் சாட் ஜி.பி.டி-க்கு எழுந்திருக்கிறது.
இதனை தொடர்ந்து ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சால் அல்ட்மென் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து ஒரு பதிவிட்டது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
can yall please chill on generating images this is insane our team needs sleep
— Sam Altman (@sama) March 30, 2025
அவர், `` கிப்லி புகைப்படங்களை ஜென்ரேட் செய்வதிலிருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்ள முடியுமா? இது மிகவும் பயங்கரமானதாக இருக்கிறது. எங்களின் குழுவுக்கு தூக்கம் தேவை." எனப் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பதிவுக்கு ஒருவர், `` உங்களின் குழுவை நீக்கிவிட்டு புதிய குழுவை ஜென்ரேட் செய்யுங்கள்" என கமென்ட் போட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சாம் ஆல்ட்மென், ``இல்லை நன்றி, இந்த குழு 2.33 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பெரிய இணையதளத்தை கட்டமைக்கும் பாதையில் இருக்கிறது. இதுதான் உலகத்தில் சிறந்த குழு." என பதிலளித்திருக்கிறார்.