"ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா படங்கள அங்க பார்க்குறோம்; ஆனா எங்க படங்கள இங்க..." - ச...
சீனா: மணிக்கு 5,800 கி.மீ வேகம்; Hypersonic எஞ்சின்; போர் ஆயுத பந்தயத்தில் உலக நாடுகளை விஞ்சுகிறதா?
சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய 'Hypersonic Afterburner' என்ற போர் விமான கருவியைச் சோதித்துள்ளனர். இது விமானத்தின் உந்துதலை இரண்டு மடங்காக்கி, ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் (Mach 6) செலுத்த உதவும்.
பெய்ஜிங்கில் உள்ள பிகாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த இரண்டாம் நிலை எரிதல் இயந்திர நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், அடிப்படை எரிபொருள்களை உபயோகித்து எஞ்சின் மேலே பறந்தபிறகு, இந்த afterburner கூடுதல் உந்துதலை வழங்கும்.
இந்த இயந்திர நுட்பத்தின் மூலம் ஸ்க்ராம்ஜெட்டின் உந்துவிசையை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும் என்கின்றனர்.
வழக்கமாக ஜெட் விமானம் செல்லும்போது எஞ்சினில் இருந்து வெளியேறும் வாயுக்களில் மெக்னீசியம் பொடியைச் செலுத்துவதன் மூலம் இந்த உந்துவிசையைப் பெறுவதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தளம் தெரிவிக்கிறது.
இதனை உறுதி செய்வதற்கான சோதனை தரையிலிருந்து 30 கி.மீ உயரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது.
புதிய 'Hypersonic Afterburner' எப்படிச் செயல்படும்?
hypersonic ஜெட் என்பவை ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிவேகமாகச் செல்லக் கூடிய விமானங்கள். afterburner-கள் ஜெட் எஞ்சினில் பொருத்தப்படும் கூடுதல் எரிப்பு அறை. விமானத்தின் உந்துவிசையை அதிகரிப்பதற்காக, எஞ்சினில் இருந்து வாயுக்கள் வெளியேறும் ஒட்டத்தில் கூடுதல் எரிபொருட்களை அனுப்புகிறது.
ராணுவ விமானங்களில் குறிப்பாக சூப்பர்சோனிக் விமானங்களில் இதைப் பயன்படுத்துகின்றனர்.
China-வின் ஜெட் விமானங்கள் மண்ணெண்ணெய்யை (kerosene) முதன்மை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றன. எஞ்சினில் எரிக்கப்பட்ட மண்ணெண்ணெய்யிலிருந்து வெளியேறும் எஞ்சிய நீராவி மற்றும் கார்பன் டை ஆக்சைடு மெக்னீசியத்தை ஆக்சிஜனேற்றி பற்றவைக்கும். அதன் மூலம் கூடுதல் உந்துதலைப் பெற முடியும் எனச் சீன ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இதன் மூலம் ஹைப்பர்சோனிக் ஜெட் விமானத்தை மணிக்கு 5,800 கிலோ மீட்டர் வேகத்தில் செலுத்த முடியும் என்கின்றனர்.
ஹைப்பர்சோனிக் ஆயுத போட்டி!
உலக நாடுகள் தங்களது ஹைப்பர்சோனிக் ஆயுதங்களின் வேகம் மற்றும் தாக்கத்தை அதிகரிக்கப் போட்டிப்போட்டு வருகின்றன. சில நாடுகள் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், ஜெட் விமானங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்கா வரும் செப்டம்பரில் அதன் முதல் ஹைப்பர்சோனிக் ஆயுதத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனா அதன் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை ஒலியின் வேகத்தைவிட 10 மடங்கு அதிக வேகத்தில் (Mach 10) செல்லும்விதமாக உருவாக்கும் முயற்சியில் . உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs