MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
ஐபில்: பந்தயம் கட்டிய மூவர் கைது!
ஐபிஎல் போட்டி மீது பந்தயம் கட்டிய மூவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.
நவி மும்பையில் சன்பாடா பகுதியில் ஒரு குடியிருப்பு வளாகத்தில், ஐபிஎல் கிரிக்கெட் மீது பந்தயம் கட்டி, ஆன்லைன் சூதாட்டம் நடத்தப்படுவதாக மும்பை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர், சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவரை கைது செய்தனர். மேலும், ரூ. 2.6 லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும் மகாராஷ்டிர சூதாட்டத் தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், சூதாட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் கூறினர்.
இதையும் படிக்க:ஐபிஎல் போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்!