செய்திகள் :

டேனியல் பாலாஜி : 'ஹீரோவாக வரக்கூடிய தகுதிகள் அத்தனையும் அவரிடம் இருந்தது' - நெகிழும் இயக்குநர்கள்

post image

'காக்க காக்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் டேனியல் பாலாஜி. சென்ற வருடம் இதே நாளில் அவர் காலமானார். அவரது மறைவு குறித்து கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தும் போது, “தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி” என்று பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

டேனியல்

பாலாஜி டு டேனியல் பாலாஜி

டேனியல் பாலாஜியின் நிஜப்பெயர் பாலாஜி. 'சித்தி' என்ற தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்திருந்ததால் டேனியல் பாலாஜியாக மாறினார். `காக்க காக்க', `வேட்டையாடு விளையாடு', `பொல்லாதவன்', `பைரவா', `வடசென்னை', `பிகில்' உள்ளிட்ட பல படங்களில் தனது முத்திரையை பதித்தவர். அவரது மறைவு குறித்து இயக்குநர்கள் எஸ்.எஸ்.ஸ்டான்லி மற்றும் சி.வி.குமார் ஆகியோர் கனத்த இதயத்துடன் பகிர்ந்தவை இங்கே.

எஸ்.எஸ்.ஸ்டான்லி

'ஏப்ரல் மாதத்தில்' படத்தின் இயக்குநரும், 'மகாராஜா' உள்பட பல படங்களில் நடித்தவருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி நினைவுகள் பகிர்கிறார்.

''என்னோட படத்துல தான் அவர் அறிமுகமானதாக பலரும் நினைப்பார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. 'காக்க காக்க' படத்தில் அவரது மிரட்டலான நடிப்பு பார்த்து தான் அவரை கமிட் செய்தேன். அவர் முரளியின் உறவினர் என்பதெல்லாம் பின்னர் தான் தெரியவந்தது. அவர் தமிழில் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த ஒரு ஹீரோவாக உருவாகியிருக்க வேண்டியவர். அதற்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் உண்டு.

ஆனால், ஏனோ சின்னச் சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சின்ன கதாபாத்திரங்கள் எதுவும் நடித்திராமல் கொஞ்சம் பிடிவாதமாக இருந்திருந்தால் ஹீரோவா வாய்ப்பே அவருக்கு கிடைத்திருக்கும் என்பது எனது நம்பிக்கை.'' என்கிறார் எஸ்.எஸ்.ஸ்டேன்லி.

சி.வி.குமார்

சி.வி.குமாரின் இயக்கத்தில் 'மாயவன்', 'கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் டேனியல்.

''அவர் மிக நெருங்கிய நண்பர். நல்ல மனிதர். திரையில் தான் ரொம்ப கொடூரமானவராக இருந்தார். ஆனால், பழகுவதற்கு இனிமையானவர். திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நானும் செல்வேன். என்னோட வீட்டிற்கு அவரும் வருவார். நேரம் கிடைக்கையில் பேசிக்கொள்வோம். நான் இயக்கிய இரண்டு படங்களில் அவர் நடித்திருக்கிறார். உதவி இயக்குநர்களின் மீது பேரன்பு உள்ளவர். அருமையான மனிதர். அவரது இழப்பு தனிப்பட்ட முறையிலும் இழப்பு தான். எனது தயாரிப்பில் ஒரு படம் அவர் இயக்கவும் விரும்பினார். அதற்கான வேலைகளும் ஒரு பக்கம் நடந்தது. அவர் மறைவை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.'' என்கிறார் சி.வி.குமார்.

Sardar 2: "சர்தார் 2 படம் மிகப்பெரிய போரைப் பற்றி பேசுது" - கார்த்தி சொல்லும் ரகசியம்!

நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் 2022-ல் வெளியான `சர்தார்' படத்தின் இரண்டு பாகம் தயாராகி வருகிறது. சர்தார் பாகம் 2-ல் புதிதாக மாளவிகா மோகன், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இணைந்த... மேலும் பார்க்க

செருப்புகள் ஜாக்கிரதை விமர்சனம்: செருப்புக்குள் வைரம்... சிரிக்க வைக்கிறதா சிங்கம்புலி சீரிஸ்?

சென்னையில் வைரக் கடத்தலில் ஈடுபடுகிறார் ரத்னம். அப்படி ஒரு நாள் அவர் வைரத்தைக் கடத்திச் செல்லும்போது காவல்துறையினருக்கு ரத்னத்தைப் பற்றி எங்கிருந்தோ தகவல் பறக்கிறது. அதனைத் தொடர்ந்து ரத்னத்தைக் காவல் ... மேலும் பார்க்க

மீண்டும் வெடித்த தனுஷ் கால்ஷீட் விவகாரம்; ஆர்.கே.செல்வமணிக்கு Five star பட நிறுவனம் கேள்வி

தனுஷ் தங்கள் படத்தில் நடிப்பதாகக் கூறி முன்பணம் வாங்விட்டு தற்போது வரை படப்பிடிப்பிற்கு கால்ஷீட் அளிக்காமல் உள்ளார் எனக் கூறி, Five star creations பங்குதாரர் கலைச்செல்வி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ... மேலும் பார்க்க

Suriya 45: சென்னையில் பிரமாண்ட திருவிழா செட்; சூர்யா, த்ரிஷாவின் டூயட் - பரபர அப்டேட்

சூர்யாவின் 'ரெட்ரோ' வரும் மே மாதம் முதல் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு அடுத்த படமான 'சூர்யா 45', படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். கடந்த நவம்பரில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, நிறைவு கட்டத்தை நோக... மேலும் பார்க்க

Ajith: ``போட்டியை ஆதிக் என்ஜாய் பண்ணியிருப்பார்!'' - கால்பந்து போட்டிக்குப் பிறகு ஷாலினி பேட்டி

நேற்றைய தினம் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் மற்றும் பிரேசில் லெஜெண்ட்ஸ் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரர்களான ரொனால்டினோ, ரிவால்டோ... மேலும் பார்க்க