சபரிமலை ஐயப்பன் கோயில்: இன்று பங்குனி உத்திர கொடியேற்றம்; எப்போது வரை நடை திறந்த...
Sardar 2: "சர்தார் 2 படம் மிகப்பெரிய போரைப் பற்றி பேசுது" - கார்த்தி சொல்லும் ரகசியம்!
நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் 2022-ல் வெளியான `சர்தார்' படத்தின் இரண்டு பாகம் தயாராகி வருகிறது.
சர்தார் பாகம் 2-ல் புதிதாக மாளவிகா மோகன், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இணைந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், திரைப்படக் குழு சார்பில் சென்னையில் இன்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, பி.எஸ்.மித்ரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, ``சர்தார் என்று பெயர் வைத்திலிருந்தே இந்தப் படத்தின் மீது எனக்குத் தனி ஈர்ப்பு உண்டு.
மித்ரன் அடுத்து என்ன சொல்லிப் பயமுறுத்தப் போறாருனு எல்லோரும் கேக்கறாங்க. ஃபர்ஸ்ட் படத்துல (இரும்புத்திரை) மொபைல்ல மெசேஜ் வந்தாலே பயமா இருக்கும், அடுத்த படத்துல (சர்தார் 1) வாட்டர் பாட்டில் பாத்தாலே பயமா இருக்கும்.
இந்தப் படத்துல அதவிட பயங்கரமான விஷயத்தை வச்சிருக்கிறார். உண்மையாவே இந்தப் படத்துல அச்சுறுத்தக் கூடிய பெரிய விஷயத்தைத் தொட்டிருக்கார்.
வில்லன் எவ்ளோ பெரிய ஆளுன்றத வச்சுதான் ஹீரோ எவ்ளோ நல்லவன்றது. சண்ட போட்ற ரெண்டு பேரும் மிகப்பெரிய ஆளா இருந்தாதான் போர் சுவாரஸ்யமா இருக்கும்.
அப்படி இந்தப் படம் மிகப்பெரிய போர் பத்தி பேசுது. எதிர்ல எஸ்.ஜே. சூர்யா என்றதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். மித்ரன் ஒரு பழக்கம் என்னனா, ஃபர்ஸ்ட் ஃப்ளாஸ்பேக்தான் எடுப்பார். ஷூட்டிங் செட் பார்த்து பயந்துட்டேன்.
இன்னைக்குத் தயாரிப்பாளராக இருக்கிறது ஈஸி இல்ல. வெறும் ஐடியாவையும், உழைப்பையும் மட்டுமே நம்பி பெரிய ரிஸ்க் எடுக்குறாங்க.
அந்த அளவுக்கு, இந்தப் படத்துல மித்ரனோட உழைப்பை முக்கியமா பாக்றேன். எல்லோருக்கும் இது புரியனும், சுவாரஸ்யமா இருக்கணும்னு நெறைய மெனக்கெட்டிருக்கிறார்.
எஸ்.ஜே சூர்யாவுக்கு நடிப்புத் தீனி எவ்ளோ கொடுத்தாலும் அவருக்குப் பத்தறதில்ல. அவர் கேட்டு கேட்டு பண்றத பார்க்கும்போது அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.
அவர் செட் ல நாங்க செல்போன் தொட்றதே இல்ல. அவர்கிட்ட இருந்து தெரிஞ்சிக்கிறதுக்கு அவ்ளோ விஷயம் இருக்கும். கைதிக்கு அப்புறம் நானும் சாம்.சி.எஸ்ஸும் இணைந்திருக்கோம்" என்று பேசி முடித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...